RCB vs CSK
RCB vs CSK IPL
கிரிக்கெட்

2024 IPL: 21 போட்டிக்கான பகுதி அட்டவணை வெளியீடு! முதல் போட்டியில் தோனி-டுபிளெசி மோதல்! #முழுவிவரம்

Rishan Vengai

உலகத்தின் நம்பர் 1 டி20 லீக் தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 17வது எடிசன் வரும் மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 17 நாட்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டியிருக்கும் அட்டவணை பட்டியலின் படி முதல் பகுதியாட்டத்தில் 21 போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) - 5 கோப்பைகள்

மும்பை இந்தியன்ஸ் (MI) - 5 கோப்பைகள்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) - 2 கோப்பைகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) - 1 கோப்பை

சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் (SRH) - 1 கோப்பை

குஜராத் டைட்டன்ஸ் (GT) - 1 கோப்பை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) - 0 கோப்பை

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) - 0 கோப்பை

பஞ்சாப் கிங்ஸ் (PBKS) - 0 கோப்பை

டெல்லி கேபிடல்ஸ் (DC) - 0 கோப்பை,

முதலிய 10 அணிகள் 17வது ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தும் கனவோடு தயாராகி வருகிம் நிலையில், தங்களுடைய கோப்பை வெல்லாத அணிகளுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

rcb

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் 6 அணிகளில் ஒருமுறையேனும் கோப்பையை வென்றிருக்கும் நிலையில், மீதமிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் ஏதேனும் ஒன்று இந்தமுறை தங்களுடைய முதல் கோப்பையை வெல்லவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு ஐபிஎல் ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.

DC

இந்நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2024 ஐபிஎல் தொடரின் அட்டவணையானது இன்று மாலை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 74 ஆட்டங்களில் முதல் 21 ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் CSK - RCB மோதல்!

எப்போதும் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது ஒன்று அதிகமாக ரைவல்ரி வைத்திருக்கும் அணிகளுக்கு இடையேயும், கோப்பை வென்ற வின்னர் மற்றும் ரன்னர் அணிகளுக்கு இடையேயும் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தமுறை மார்ச் 22ம் தேதி நடக்கவிருக்கும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான CSK அணியும், ஃபேஃப் டுபிளெசி தலைமையிலான RCB அணியும் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. சென்னையில் நடக்கவிருக்கும் முதல் போட்டியில் தல தோனி மற்றும் தளபதி டுபிளெசி இருவரின் மோதலை காண சென்னை ரசிர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

Rcb vs Csk

முதல் 21 நாட்களுக்கு நடக்கவிருக்கும் பகுதிநேர அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் படி 2024 ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கி நடக்கவிருக்கிறது. மார்ச் 22 முதல் ஏப்ரல் 7ம் தேதிவரை அறிவிக்கப்பட்டிருக்கும் அட்டவணையை பொறுத்தவரையில் 21 ஆட்டங்கள் நடக்கவிருக்கின்றன. அட்டவணையின் படி பெரும்பாலான அணிகள் 4 முறை மோதவிருக்கின்றன, டெல்லி கேபிடல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் முதலிய அணிகள் 5 ஆட்டங்களில் விளையாடுகின்றன. கொல்கத்தா அணி மட்டும் 3 போட்டிகளில் விளையாடுகிறது.

Gill - Hardik

அட்டவணையில் ஹைலைட் விசயமாக மார்ச் 24ம் தேதி ஹர்திக் தலைமையிலான மும்பை அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டிகள் விவரம்:

1. சென்னை அணி விளையாடும் 4 ஆட்டங்கள்:

மார்ச் 22 - CSK vs RCB - 6.30 PM - சென்னை

மார்ச் 26 - CSK vs GT - 6.30 PM - சென்னை

மார்ச் 31 - CSK vs DC - 6.30 PM - விசாகப்பட்டினம்

ஏப்ரல் 5 - CSK vs SRH - 6.30 PM - ஹைத்ராபாத்

2. மும்பை அணி விளையாடும் 4 ஆட்டங்கள்:

மார்ச் 24 - MI vs GT - 6.30 PM - அகமதாபாத்

மார்ச் 27 - MI vs SRH - 6.30 PM - ஹைத்ராபாத்

ஏப்ரல் 1 - MI vs RR- 6.30 PM - மும்பை

ஏப்ரல் 7 - MI vs DC- 6.30 PM - மும்பை

3. பெங்களூர் அணி விளையாடும் 5 ஆட்டங்கள்:

மார்ச் 22 - RCB vs CSK - 6.30 PM - சென்னை

மார்ச் 25 - RCB vs PBKS - 6.30 PM - பெங்களூர்

மார்ச் 29 - RCB vs KKR - 6.30 PM - பெங்களூர்

ஏப்ரல் 2 - RCB vs LSG - 6.30 PM - பெங்களூர்

ஏப்ரல் 6 - RCB vs RR - 6.30 PM - ஜெய்ப்பூர்

4. குஜராத் அணி விளையாடும் 5 ஆட்டங்கள்:

மார்ச் 24 - GT vs MI - 6.30 PM - அகமதாபாத்

மார்ச் 26 - GT vs CSK - 6.30 PM - சென்னை

மார்ச் 31 - GT vs SRH - 2.30 PM - அகமதாபாத்

ஏப்ரல் 4 - GT vs PBKS - 6.30 PM - அகமதாபாத்

ஏப்ரல் 7 - GT vs LSG - 6.30 PM - லக்னோ

5. கொல்கத்தா அணி விளையாடும் 3 ஆட்டங்கள்:

மார்ச் 23 - KKR vs SRH - 6.30 PM - கொல்கத்தா

மார்ச் 29 - KKR vs RCB - 6.30 PM - பெங்களூர்

ஏப்ரல் 3 - KKR vs DC - 6.30 PM - விசாகப்பட்டினம்

6. ராஜஸ்தான் அணி விளையாடும் 4 ஆட்டங்கள்:

மார்ச் 24 - RR vs LSG - 2.30 PM - ஜெய்ப்பூர்

மார்ச் 28 - RR vs DC - 6.30 PM - ஜெய்ப்பூர்

ஏப்ரல் 1 - RR vs MI - 6.30 PM - மும்பை

ஏப்ரல் 6 - RR vs RCB - 2.30 PM - ஜெய்ப்பூர்

7. ஹைத்ராபாத் அணி விளையாடும் 4 ஆட்டங்கள்:

மார்ச் 23 - SRH vs KKR - 6.30 PM - கொல்கத்தா

மார்ச் 27 - SRH vs MI - 6.30 PM - ஹைத்ராபாத்

மார்ச் 31 - SRH vs GT - 2.30 PM - அகமதாபாத்

ஏப்ரல் 5 - SRH vs CSK- 6.30 PM - ஹைத்ராபாத்

8. டெல்லி அணி விளையாடும் 5 ஆட்டங்கள்:

மார்ச் 23 - DC vs PBKS - 2.30 PM - மொஹாலி

மார்ச் 28 - DC vs RR - 6.30 PM - ஜெய்ப்பூர்

மார்ச் 31 - DC vs CSK - 6.30 PM - விசாகப்பட்டினம்

ஏப்ரல் 3 - DC vs KKR - 6.30 PM - விசாகப்பட்டினம்

ஏப்ரல் 7 - DC vs MI - 2.30 PM - மும்பை

9. பஞ்சாப் அணி விளையாடும் 4 ஆட்டங்கள்:

மார்ச் 23 - PBKS vs DC - 2.30 PM - மொஹாலி

மார்ச் 25 - PBKS vs RCB - 6.30 PM - பெங்களூர்

மார்ச் 30 - PBKS vs LSG - 6.30 PM - லக்னோ

ஏப்ரல் 4 - PBKS vs GT - 6.30 PM - அகமதாபாத்

10. லக்னோ அணி விளையாடும் 4 ஆட்டங்கள்:

மார்ச் 23 - LSG vs RR - 2.30 PM - ஜெய்ப்பூர்

மார்ச் 30 - LSG vs PBKS - 6.30 PM - லக்னோ

ஏப்ரல் 2 - LSG vs RCB - 6.30 PM - பெங்களூர்

ஏப்ரல் 7 - LSG vs GT - 6.30 PM - லக்னோ

எதனால் பகுதிநேர அட்டவணை வெளியிடப்பட்டது?

2024 ஐபிஎல் தொடரானது மார்ச் மாதம் முதல் தொடங்கி மே மாதம் முடிவு வரை நடைபெறும் நிலையில், ”நாடாளுமன்ற தேர்தல் மற்றும் டி20 உலகக்கோப்பையை” கருத்தில் கொண்டு முழு தொடருக்குமான தேதிகளை முடிவுசெய்வதில் சிக்கல்கள் இருப்பதால் பகுதிநேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல்

தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையின் படி மே மாதம் 26-ம் தேதி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் சூழல் இருக்கிறது. அதன்படி பார்த்தால் ஜூன் மாதம் 1ம் தேதி டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் சூழலில், ஐபிஎல் தொடருக்கும் டி20 உலகக்கோப்பைக்கும் வெறும் 5 நாட்கள் மட்டுமே இடைவெளியிருக்கிறது. மீதமிருக்கும் அட்டவணை நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு வெளியிடப்படும் என தெரிகிறது.