virat kohli - david miller bcci / icc
கிரிக்கெட்

ஒரே நாளில் ஆறு ODI சதங்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை!

விராட் கோலியின் 139* ரன்களை சேர்த்து நேற்று ஒரே நாளில் 6 கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தனர்.

Rishan Vengai

ஒரே நாளில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறு வீரர்கள் சதமடித்து வரலாறு படைத்தனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 88 பந்தில் 139 ரன்கள் குவித்த விராட் கோலியின் 55வது சதம் இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதே போட்டியில் கேப்டன் சுப்மன் கில், ஜஸ்டின் கிரீவ்ஸ், மேலும் பவுமா, டேவிட் மில்லர், டாம் பான்டன் ஆகியோரும் சதமடித்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று ஆடிய விராட் கோலியின் ருத்ரதாண்ட ஆட்டம், இந்திய ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டுசென்றது. வெறும் 88 பந்தில் 10 பவுண்டரிகள் 9 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய கிங் கோலி ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் அடித்தார். இது அவருடைய 55வது ஒருநாள் சதமாக பதிவுசெய்யப்பட்டது. அதேபோட்டியில் கோலியுடன் சேர்த்து இந்திய கேப்டன் சுப்மன் கில்லும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜஸ்டின் கிரீவ்ஸும் சதமடித்து அசத்தினர்.

virat kohli

இந்தசூழலில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர்கள் டெம்பா பவுமா மற்றும் டேவிட் மில்லர் இருவரும் சதமடித்தனர். மேலும் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் டாம் பான்டன் 126 ரன்கள் அடித்து தொடரை 2-1 என வெல்லவைத்தார்.

இந்நிலையில் தான் நேற்று ஒரே நாளில் மட்டும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6 வீரர்கள் சதமடித்து சாதனை படைத்தனர். இதற்குமுன்பு பலமுறை ஒரே நாளில் 5 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன, ஆனால் ஒரு நாளில் 6 ODI சதங்கள் அடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.