பாகிஸ்தான், மைக்கேல் வாகன் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

T20WC| "பாகிஸ்தான் அரையிறுதிக்கே போகாது” - இங்கிலாந்து Ex கேப்டன் கணிப்பு!

இந்தியாவுடன் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், லீக் போட்டியில் விளையாடுவதைப் புறக்கணித்துள்ளது.

Prakash J

இந்தியாவுடன் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், லீக் போட்டியில் விளையாடுவதைப் புறக்கணித்துள்ளது. இந்த நிலையில், "பாகி. அரையிறுதிக்கே போகாது” என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலககோப்பையின் 10ஆவது சீசன் பிப்ரவரி 7 தொடங்க இருக்கிறது. மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரில், 20 அணிகளும் தலா ஐந்து அணிகள் கொண்ட நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, இந்தியாவுடன் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், லீக் போட்டியில் விளையாடுவதைப் புறக்கணித்துள்ளது. இது உலக அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணி, இதை உறுதிசெய்யும்பட்சத்தில் அவ்வணி மீது ஐசிசி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், "பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கே போகாது” என இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “"எனது 4 டி20 உலகக் கோப்பை அரையிறுதி அணிகள்... இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து & ஆஸ்திரேலியா" எனப் பதிவிட்டுள்ளார்.