சஞ்சு சாம்சன் - தோனி web
கிரிக்கெட்

தோனி விக்கெட் கீப்பிங் செய்வாரா..? ஃபீல்டிங் பயிற்சி எடுக்கும் சஞ்சு சாம்சன்!

2026 ஐபிஎல் தொடரில் தோனி விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்றும், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்வார் என்றும் சொல்லப்பட்டது. அதேபோல தோனி ஃபீல்டிங்கில் இல்லாமல் பிம்பேக்ட் வீரராக மட்டுமே வருவார் என கூறப்பட்டது.

Rishan Vengai

சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பிங் செய்யும் வாய்ப்பு தோனிக்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சஞ்சு சாம்சன் ஃபீல்டிங் பயிற்சி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், தோனி விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், மறுபுறம் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரும் 10 அணிகளிடம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஒருபக்கம் OG சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 6வது கோப்பைக்காக தயாராகிவரும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற ஆர்சிபி அணி அடுத்த கோப்பைக்காக தயாராகி வருகிறது. வலைப்பயிற்சியில் விராட் கோலி சக வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதும், சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சனுடன் தோனி உரையாடுவதும் என தொடர்ந்து வீரர்கள் வலுவாக தயாராகி வருகின்றனர்.

2025 ஆர்சிபி அணி

இந்தசூழலில் சென்னை அணியில் விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், தோனி, உர்வில் பட்டேல், கார்த்திக் சர்மா என 4 வீரர்கள் இருப்பதால் தோனி அணி பிளேயிங் 11-ல் விளையாட மாட்டார் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியாகியிருக்கும் புகைப்படம் தோனி விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சென்னை வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், தோனி காலில் இருந்துவரும் பிரச்னையால் பயிற்சியிலிருந்து கால்தாங்கி நடந்துசென்றதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. இந்தசூழலில் தோனி முழு உடற்தகுதியுடன் இல்லை என்றும், அவரால் 2026 ஐபிஎல் தொடரில் முழுவதுமாக விளையாட முடியாது என்றும், ஓய்வு அறிவித்தால் கூட ஆச்சரியமில்லை என்றும் சொல்லப்பட்டது.

இந்தசூழலில் தான் வலைப்பயிற்சியில் சஞ்சு சாம்சன் உயரமான கேட்ச்களை பிடிக்க பயிற்சி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி பார்த்தால் தோனியே விக்கெட் கீப்பிங் செய்வார் என்றும், சஞ்சு சாம்சன் ஃபீல்டிங் தான் செய்வார் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.