தோனி web
கிரிக்கெட்

வாவ்வ்! எவ்ளோ க்யூட்டா இருக்கு..! மனைவியுடன் நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடிய தோனி! வைரல் வீடியோ!

2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தன்னுடைய குடும்பத்தினருடன் தோனி நேரத்தை செலவிட்டு வருகிறார்.

Rishan Vengai

2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற குழப்பம் நீடித்திருந்தது. ஐபிஎல் ஏலத்திற்கு முன் வெளியிடப்பட்ட தக்கவைப்பு விதிமுறை பட்டியலில் இடம்பெற்ற அன்கேப்டு வீரர் விதிமுறைப்படி தோனி 2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தோனியின் வருகைக்காக ”நீ பொட்டுவச்ச தங்கக்குடம்” பாடலுடன் தோனியின் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தோனி அவருடைய குடும்பத்தினருடன் நேரல் செலவிட்டு வருகிறார்.

தோனி

இத்தகைய சூழலில் சமீபத்தில் பஹாடி நாட்டுப்புற பாடலுக்கு தோனியும் அவருடைய மனைவியும் நடனமாடி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடிய தோனி..

வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரிஷிகேஷில் உள்ளூர் மக்களுடன் பஹாடி நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

வைரலாகும் வீடியோவில் தோனியும் அவருடைய மனைவியும் இணைந்து 'குலாபி ஷராரா' என்ற பாடலுக்கு நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மேலும் ஒரு வருடம் விளையாடுவார் என்பதால், அவருடைய ரசிகர்கள் மீண்டும் மஞ்சள் நிற ஜெர்சியில் அவரை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.