ind vs sl test match bcci
கிரிக்கெட்

167 ரன்கள் விளாசிய தேவ்தத் படிக்கல்.. 2ஆம் நாள் முடிவில் 460 ரன்கள் குவித்த இந்தியா!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய தேவ்தத் படிக்கல் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Rishan Vengai

காலேவில் நடைபெறும் இலங்கை-இந்தியா முதல் டெஸ்டில், 600வது டெஸ்டை விளையாடும் இந்திய அணி 2ஆம் நாள் முடிவில் 9 விக்கெட் இழந்து 460 ரன்கள் குவித்தது. 230 பந்துகளில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 167 ரன்கள் அடித்த தேவ்தத் படிக்கல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்து இரட்டை சதத்தை நெருங்கியும் தவறினார். கேஎல் ராகுல் 84, துருவ் ஜூரல் 51 ரன்கள் சேர்த்தனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள காலே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இலங்கைக்கு எதிராக தன்னுடைய 600வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிற்கு பிறகு 600 டெஸ்ட் போட்டியில் விளையாடும் 3வது உலக அணி என்ற பெருமையை பெற்றது.

இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 2ஆம் நாளான இன்றைய போட்டி முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 460 ரன்கள் குவித்துள்ளது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இன்ஃபார்ம் வீரர் தேவ்தத் படிக்கல் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவுசெய்தினார்.

230 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 167 ரன்கள் விளாசிய தேவ்தத் படிக்கல், இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் பாதியில் வெளியேறிய கேஎல் ராகுல் மீண்டும் இன்று விளையாட வந்து 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய துருவ் ஜூரல் 51 ரன்கள் அடித்து அசத்த 2ஆம் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்தியா 460 ரன்கள் சேர்த்துள்ளது.