david warner arrested web
கிரிக்கெட்

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் கைது.. என்ன காரணம்..?

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Rishan Vengai

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் வார்னர், பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக வெற்றிகரமாக விளையாடி வரும் நிலையில், குடும்பத்தைச் சந்திக்க ஆஸ்திரேலியா திரும்பியபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்கள் பட்டியலில் 40 சராசரியுடன் இருக்கும் ஒரே வீரர் டேவிட் வார்னர் மட்டுமே. ஐபிஎல் கோப்பை வென்ற ஜாம்பவான் கேப்டனாகவும், ஐபிஎல்லில் 6500 ரன்களை குவித்த சக்சஸ்ஃபுல் வீரராகவும் இருந்தபோதும் அவருக்கான வாய்ப்பு ஐபிஎல்லில் வழங்கப்படவில்லை.

david warner

இந்தசூழலில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவர், அவ்வணியின் கேப்டனாகவும் வழிநடத்திவருகிறார். கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் நடந்துவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள கராச்சி கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்நிலையில் தனது அணியின் கேப்டனான வார்னருக்கு, போட்டிகளுக்கு இடையில் தனது குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக, தொடரிலிருந்து ஒரு குறுகிய கால தனிப்பட்ட விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநேரத்தில் தான் ஆஸ்திரேலியாவில் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் வார்னர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டேவிட் வார்னர் கைது..

வெளியாகியிருக்கும் தகவலின் படி, சிட்னியின் மரூப்ராவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக டேவிட் வார்னர் குற்றம் சாட்டப்பட்டார். நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை திடீர் சோதனை நடத்தியபோது, பரிசோதனை நடைபெறும் இடத்தை அடைவதற்குச் சற்று முன்பு, வார்னர் தனது வாகனத்தை பார்க்கிங் செய்ய முயன்றதாகவும், அப்போது காவல்துறையினர் அவரை சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

சாலையோரத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மது அருந்தியிருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் காவல்நிலையம் அழைத்துச்செல்லப்பட்ட அவர், அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இந்தசெய்தி கராச்சி கிங்ஸ் அணிக்கு பிரச்னையாக மாறியுள்ளது.