akash madhwal web
கிரிக்கெட்

மும்பைக்கு எதிராக முன்னாள் MI வீரரை களமிறக்கும் CSK.. இன்னைக்கு சம்பவம் இருக்கு!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் முக்கியமான போட்டி இன்று மும்பை வான்கடேவில் நடைபெறவிருக்கிறது.

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடரில் மோசமான தொடக்கத்துக்குப் பிறகு, 4 தோல்வியுடன் பின்தங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இன்று வான்கடே மைதானத்தில் முக்கியமான போட்டியில் மோதுகின்றன. ஆயுஷ் மாத்ரே காயம் காரணமாக வெளியேற, அவருக்குப் பதிலாக முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளரை சிஎஸ்கே அவசரமாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மாற்றம் போட்டிக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.

csk vs mi

5 முறை கோப்பை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரண்டு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாகவே தொடங்கியுள்ளனர். 6 போட்டிகளின் முடிவில் தலா 4 தோல்வியுடன் 7வது மற்றும் 8வது இடத்திலிருக்கும் மும்பை, சிஎஸ்கே அணிகள் இன்று முக்கியமான போட்டியில் மோத உள்ளனர்.

மாத்ரே காயம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆயுஷ் மாத்ரே, கலீல் அகமது போன்ற வீரர்களின் காயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற சூழல் இருந்துவருகிறது.

இந்நிலையில் தான் ஆயுஷ் மாத்ரேவிற்கான மாற்றுவீரரை சென்னை அணி இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த போட்டியில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலை ஒப்பந்தம் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மாத்ரே காயத்திற்கு பிறகு பவுலர்களை ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டிய சென்னை அணி, 3 பவுலர்களை பயிற்சிக்கு வரவழைத்து சோதனை செய்தது.

இந்தசூழலில் தான் ஆயுஷ் மாத்ரேவிற்கு மாற்று வீரராக வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே அணி. இவர் 2023-2024 ஐபிஎல் சீசனில் பும்ரா இல்லாதபோது மும்பை அணிக்கு சிறப்பாக பந்துவீசி எல்லோருடைய கவனத்தையும் பெற்றார். 2023 ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பைக்காக சிறப்பாக பந்துவீசி 3.3 ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இன்று வான்கடே மைதானத்தில் சென்னை அணியில் ஆகாஷ் மத்வால், ஸ்பென்சர் ஜான்சன் போன்ற பவுலர்கள் திரும்புவார்கள் என்பதால் இந்தபோட்டி மும்பை அணிக்கு சவாலானதாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.