ஜம்மு காஷ்மீரில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்திய கிரிக்கெட் வீரரால் சர்ச்சை web
கிரிக்கெட்

ஜம்மு - காஷ்மீர் | ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்திய கிரிக்கெட் வீரரால் சர்ச்சை!

ஜம்மு-காஷ்மீரில் நடந்த உள்நாட்டு லீக் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலஸ்தீனக் கொடியைப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Rishan Vengai

ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்கில் கிரிக்கெட் வீரர் ஃபர்கான் பட் ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அவர் மற்றும் லீக் அமைப்பாளர் ஜாஹித் பட் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-ஹமாஸ் போருக்குப் பிறகு இந்த சம்பவம் இந்தியாவில் பாலஸ்தீனிய ஆதரவை வெளிப்படுத்துகிறது.

ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்கில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்தியதால் சர்ச்சை வெடித்தது. கொடியை பயன்படுத்திய அந்த கிரிக்கெட் வீரரும், அந்த கிரிக்கெட் போட்டியின் ஏற்பாட்டாளரும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஜம்மு டிரெயில்பிளேசர்ஸ் அணியும் உள்ளூர் JK11 அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் JK11 அணிக்காக விளையாடிய ஃபர்கான் பட் என்ற கிரிக்கெட் வீரர் பேட்டிங் செய்யும்போது அவருடைய ஹெல்மெட்டில் பாலஸ்தீன கொடியை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் சர்ச்சையாக வெடித்தநிலையில் விசாரணையானது லீக்கின் அமைப்பாளர் ஜாஹித் பட் மற்றும் போட்டிக்காக மைதானத்தை வழங்கிய நபர் என விரிவாக நடந்துவருகிறது. தனிப்பட்ட கிரிக்கெட் வீரர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அசோசியேசன் இந்த லீக் போட்டிகள் தங்களால் நடத்தப்படவில்லை என பிரச்னையிலிருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்-ஹமாஸுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட சில மாதங்களுக்கு பிறகு, பாலஸ்தீனியர்களின் மாநில அந்தஸ்து கோரிக்கையானது வலுவானதாக இருந்துவரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடந்த இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.