Ravichandran ashwin stand chatgpt
கிரிக்கெட்

சேப்பாக்கத்தில் அஸ்வின் உட்பட 3 தமிழ்நாடு கிரிக்கெட்டர்களுக்கு ஸ்டாண்ட்!

முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவருடைய பெயரில் ஸ்டேண்ட் வைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

சேப்பாக்கம் மைதானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் வெங்கடராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பெயரில் ஸ்டாண்ட் அமைக்கப்படவிருக்கிறது. இந்திய அணியில் பல சாதனைகள் படைத்த இவர்களுக்கு இந்த மரியாதை வழங்கப்படுவது பெருமையாகும்.

தமிழகத்திலிருந்து கோபாலன், வெங்கட ராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன், WV ராமனில் ஆரம்பித்து ராபின் சிங், சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி, தினேஷ் கார்த்திக், எல் பாலாஜி, முரளி விஜய் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் வரை 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியுள்ளனர்.

Krishnamachari Srikkanth

அந்தப்பட்டியல் தற்போது விஜய் சங்கர், நடராஜன், வாசிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி என நீண்டுவரும் நிலையில், வெங்கட ராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மட்டும் இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளனர்.

Venkataraghavan

அதேபோல இந்திய பவுலராக 537 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி பல உலக சாதனைகளை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தடம்பதித்துள்ளார்.

ashwin

இந்தசூழலில் தான் இந்தியாவிற்காக பல்வேறு சாதனைகள் படைத்து தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்தவகையில் முன்னாள் இந்திய வீரர்களான வெங்கடராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 பேருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர்களுடைய பெயரில் ஸ்டாண்ட் வைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அஸ்வின் அவருடைய யூடியூப் சேனலில் உறுதிசெய்துள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.