csk x page/csk
கிரிக்கெட்

ஐபிஎல் |CSK வெளியேற்றிய 12 வீரர்கள்.. தக்கவைக்கப்பட்டவர்கள் யார்யார்?

5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 வீரர்களை வெளியேற்றியுள்ளது.

Prakash J

5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 வீரர்களை வெளியேற்றியுள்ளது.

19வது ஐபிஎல் 2026 சீசனை முன்னிட்டு மினி ஏலம் அடுத்த மாதம் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது. மினி ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல்லில் உள்ள 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், வீரர்களின் பட்டியலை 10 அணிகளும், இன்று மாலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடைபெற்றது. இந்நிலையில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 10 வீரர்களை வெளியேற்றியுள்ளது.

ஏற்கெனவே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகரீதியாக அனுப்பப்பட்ட நிலையில், இதர வீரர்களின் நீக்க பட்டியலை சென்னை அணி இன்று வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், மதீஷா பதிரனா, டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கரன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், ஆண்ட்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோடி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மறுபுறம், மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டான், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத் சிங் ஆகியோரை தக்கவைத்துள்ளது. ஜடேஜா மற்றும் சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியுள்ளது.