shubman gill x
கிரிக்கெட்

2 ரன்னில் தவறிப்போன சதம்.. 98 ரன்களில் ஆட்டமிழந்த கேப்டன் கில்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடிக்கும் வாய்ப்பை 2 ரன்னில் தவறவிட்டார் இந்திய கேப்டன் சுப்மன் கில்.

Rishan Vengai

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் 98 ரன்களில் சதத்தை தவறவிட்டார். 9 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் சிறப்பாக விளையாடிய அவர், நிதானத்தை இழந்ததால் 2 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்திய அணி 486/4 ரன்களுடன் 118 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டன் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிக்கோல்ஸின் அட்டகாசமான 175* ரன்கள் ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 368 ரன்கள் அடித்துள்ளது.

நியூசிலாந்தைத் தொடர்ந்து விளையாடிவரும் இந்திய அணி 486/4 ரன்களுடன் விளையாடி வருகிறது. கேஎல் ராகுல் தன்னுடைய 13வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 85 ரன்கள், படிக்கல் 80 ரன்கள் அடித்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தனர்.

இந்நிலையில் அடுத்து களமிறங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில்லும், ரிஷப் பண்ட்டும் அற்புதமான பார்ட்னர்ஷிப் போட்டு ரன்களை அதிகரித்தனர். 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என தன்னுடைய சிறந்த ஃபார்மை தொடர்ந்து கேப்டன் கில் சதமடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 98 ரன்களுக்கு போல்டாகி வெளியேறினார். சதமடிக்கவேண்டும் என நிதானத்தை இழந்ததால் 2 ரன்னில் வாய்ப்பை இழந்தார்.

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 486 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 55 ரன்னில் களத்தில் நீடிக்கிறார். இந்திய அணி 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.