வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா முழுமையாக டாமினேட் செய்து 2-0 என வெற்றி பெற்றது. வியான் முல்டர் சதம் அடித்து, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜாக் காலிஸ்ஸை நினைவுபடுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்ற நிலையில், ஜோஹன்னெஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு டஃப் கொடுத்தது வங்கதேசம். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்து சாதனை படைக்கும் நிலையில் இருந்தது வங்கதேசம். ஆனால் 2வது இன்னிங்ஸில் தரமான கம்பேக் கொடுத்த தென்னாப்பிரிக்கா வங்கதேசத்தை வீழ்த்தி அசத்தியது.
இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முழுமையாக டாமினேட் செய்த தென்னாப்பிரிக்கா சொந்த மண்ணில் தாங்கள் கிங் என நிரூபித்தது. அதிலும் பேட்டிங்கில் 7வது வீரராக களமிறங்கி சதமடித்த வியான் முல்டர், பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அற்புதமாக செயல்பட்டு வரும் வியான் முல்டன், தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ்ஸை நினைவுபடுத்துகிறார்.
பேட்டிங்கில் 29 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்களுடன் 36 சராசரியை வைத்திருக்கும் முல்டர், பந்துவீச்சில் 23 என்ற சிறந்த சராசரியுடன் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய கன்சிஸ்டன்ஷியான விளையாட்டு முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ்ஸை நினைவுபடுத்துவதோடு, அவருடைய லெகஸியை வியான் முல்டர் பின்பற்றுவார் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஏற்கனவே பேட்டிங்கில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 367* ரன்கள் நாட் அவுட்டுடன் பிரையன் லாராவின் 400 ரன்கள் சாதனையை உடைக்கும் வகையில் விளையாடிய வியான் முல்டர், தற்போது பந்துவீச்சிலும் தலைசிறந்து விளங்குகிறார்.
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என ஒயிட்வாஷ் செய்தது தென்னாப்பிரிக்கா. WTC புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.