bumrah  web
கிரிக்கெட்

Champions Trophy | கில், ஹர்திக் பாண்டியா Rejected.. துணை கேப்டனாகும் பும்ரா! அணி அறிவிப்பு எப்போது?

2025 சாம்பியன்ஸ் டிரோபி தொடருக்கான இந்திய அணியில் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

2024-ம் ஆண்டு மிக நீண்ட டெஸ்ட் அட்டவணையை கொண்டிருந்த இந்திய அணி, கடந்தாண்டில் வெறும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தது. முழுக்க முழுக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது கவனம் செலுத்திய இந்திய அணி, கடைசி 8 டெஸ்ட் போட்டிகளில் 7-ல் வெற்றியை பதிவுசெய்யாததன் மூலம் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை பறிகொடுத்தது.

இந்நிலையில் இந்திய அணியின் கவனம் அடுத்தமாதம் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிரோபி மீது சென்றுள்ளது. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா கூட்டணியில் எந்த தொடரும் வெற்றிகரமானதாக அமையாத நிலையில், சாம்பியன்ஸ் டிரோபி மீது ரசிகர்கள் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி

இந்த சூழலில் அனைத்து அணிகளும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் அவர்களுடைய சாம்பியன்ஸ் டிரோபிக்கான அணியை இறுதிசெய்யவேண்டும் என்ற நிலையில், அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழு ஜனவரி 12-ம் தேதி அணியை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

கில், ஹர்திக் Rejected.. புதிய துணை கேப்டன் பும்ரா!

ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிரோபி கோப்பையானது பிப்ரவரி 19ம் தேதி தொடங்கப்படவிருக்கும் நிலையில், இந்திய அணி அதற்கு முன்பாக இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஜனவரி 22-ம் தேதி முதல் சொந்த மண்ணில் எதிர்கொள்ளவிருக்கிறது.

இந்த சூழலில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியாகியிருக்கும் ஒரு அறிக்கையின் படி, சாம்பியன்ஸ் டிரோபிக்கான 15 பேர் கொண்ட தற்கால இந்திய அணி ஜனவரி 12-ம் தேதி வெளியிடப்படும் என்றும், இறுதிப்பட்டியல் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த அறிக்கை இந்திய அணியின் புதிய ஒயிட்பால் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்படுவார் என்றும் கூறுகிறது.

பும்ரா

இதன்மூலம் 2024 இலங்கை தொடரில் துணை கேப்டனாக இருந்த சுப்மன் கில் மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா இருவரும் துணை கேப்டனுக்கான பரிந்துரைப்பட்டியலில் இருக்க மாட்டார்கள் என தெரிகிறது. இந்திய அணிக்கான தேர்வில் விஜய் ஹசாரே டிரோபியில் சிறப்பாக செயல்படும் வீரர்களின் பெயர்களும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அர்ஷ்தீப் சிங்

முகமது ஷமி விஜய் ஹசாரே தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவரும் அணிக்கு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிரோபியின் முதல் போட்டியில் பிப்ரவரி 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா.