இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் பும்ரா இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 21 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதே போல் ஆஸ்திரேலியாவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில் தேவை பின்னுக்குத் தள்ளி, பும்ரா முதலிடத்தை தனதாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 52 விக்கெட்டுகள் எடுத்து பும்ரா முதலிடத்திலும், 51 விக்கெட்டுகள் எடுத்து கபில் தேவ் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் நவாஸ் 50 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.