புவனேஷ்வர் குமார் web
கிரிக்கெட்

NO பும்ரா.. NO பிராவோ.. NO மலிங்கா.. புவனேஷ் குமார் படைத்த பிரமாண்ட சாதனை!

நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பிரமாண்ட சாதனை படைத்தார் புவனேஷ் குமார்.

Rishan Vengai

ஐபிஎல் 19வது சீசனில் ஆர்சிபி அணி சென்னைக்கு எதிராக 250 ரன்கள் குவித்து அதிரடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஃபார்மில் இருந்த ஆயுஷ் மாத்ரேவை அவுட் செய்த புவனேஷ்வர் குமார், ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப்பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்.

ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி பரபரப்பாக நடந்துவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி தங்களுடைய முழுபலத்துடன் 2வது முறையாக கோப்பையை தக்கவைக்க சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மறுபக்கம் ஆர்சிபிக்கு சவால் கொடுக்கும் விதமாக பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் சிறந்த அணிகளாக இருக்கின்றன.

புவனேஷ்வர் குமார்

இந்தசூழலில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் 250 ரன்களை குவித்த ஆர்சிபி பேட்டிங்கில் மரண அடி கொடுத்தது. அதேபோல பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு பவர்பிளேவிலேயே சென்னை அணியை தோல்வியின் பக்கம் தள்ளியது ஆர்சிபி அணி.

நேற்று நடந்த போட்டியில் சென்னையின் அதிரடி இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவை அவுட்டாக்கிய புவனேஷ்வர் குமார், ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையை படைத்தார்.

பிரமாண்ட சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்..

ஆர்சிபி அணியின் முக்கிய பவுலரான ஹசல்வுட் இல்லாத சூழலில், அணியை வழிநடத்தவேண்டிய அனுபவம் வாய்ந்த பவுலராக இருக்கும் புவனேஷ்வர் குமார் தன்னுடைய வேலையை சரியாக செய்துவருகிறார். அந்தவகையில் நேற்றைய போட்டியில் ஃபார்மில் இருந்துவரும் ஆயுஷ் மாத்ரேவின் விக்கெட்டை கைப்பற்றிய அவர், ஐபிஎல் வரலாற்றில் 200வது விக்கெட்டை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

புவனேஷ்வர் குமார்

யுஸ்வேந்திர சாஹலுக்கு பிறகு 200 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பவுலராகவும் சாதனை படைத்தார். அதிக ஐபிஎல் விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அடுத்த இடத்தில் பும்ரா நீடிக்கிறார்.

அதிக ஐபிஎல் விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்கள்:

1.புவனேஷ்வர் குமார் - 202* விக்கெட்டுகள்

2. பும்ரா - 183* விக்கெட்டுகள்

3. பிராவோ - 183 விக்கெட்டுகள்

4. மலிங்கா - 170 விக்கெட்டுகள்