india team எக்ஸ் தளம்
கிரிக்கெட்

ரூ.131 கோடி.. 2024ஐவிட அதிகம்.. இந்திய அணிக்கு ஜாக்பாட்.. பரிசு மழையில் நனைத்த பிசிசிஐ!

இந்திய அணிக்கு பிசிசிஐ 131 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

Prakash J

சாம்பியன் ஆன இந்திய அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 3 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வழங்கியது. இந்திய மதிப்பில் இது சுமார் 27.48 கோடி ரூபாயாகும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும்

2026 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் 255 ரன்கள் குவித்த இந்திய அணி, நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பை வென்று சாதனை படைத்தது. அதன்மூலம் 3 முறை டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, ஹோம் கிரவுண்டில் டி20 உலகக்கோப்பை வென்ற முதல் அணி, அடுத்தடுத்து தொடர்ச்சியாக 2 கோப்பை வென்ற முதல் அணி என 3 உலக சாதனைகளை படைத்து அசத்தியது. இந்த வெற்றிக்குப் பின்னால் இந்திய அணியின் ஒட்டுமொத்த உழைப்பும் இருக்கிறது. அபிஷேக், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா என தொடர் முழுவதும் ஒவ்வொருவரும் தங்களது திறமையை நிரூபித்தனர். ஒவ்வொரு போட்டியிலும் ஓவ்வொரு மேட்ச் வின்னர்கள் உருவாகினர். அதன் பயனே இந்திய அணி கோப்பையை கையில் ஏந்தியது. இதனால், இந்திய அணியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். சாம்பியன் ஆன இந்திய அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 3 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை வழங்கியது. இந்திய மதிப்பில் இது சுமார் 27.48 கோடி ரூபாயாகும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும். இந்த நிலையில், இந்திய அணிக்கு பிசிசிஐ 131 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.

2026 india t20 champion

இதுகுறித்து பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற வீரர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சி ஊழியர்களுக்கும் மற்றும் தேர்வுக்குழுவினருக்கும் வாரியம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கும் வாரியம் நல்வாழ்த்துகளைக் கூறுகிறது" என்று தெரிவித்துள்ளது.

கடந்த 2024 டி20 உலகக்கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றபோது பிசிசிஐ 125 கோடி பரிசுத் தொகையை அறிவித்து இருந்தது. தற்போது அதில் இருந்து 6 கோடி உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இடையே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய ஒருநாள் அணிக்கு 58 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு வருடங்களாக ஐசிசி போட்டிகளில் இந்தியா வலுவான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு ஆண்கள் டி20 உலகக் கோப்பை பெற்ற இந்திய அணி, 2025ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது. அடுத்து, இந்திய மகளிர் அணி, ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியும் உலகக் கோப்பையை வென்றிருந்தது.