பாலாஜி கே
பாலாஜி கே X
கிரிக்கெட்

நொண்டி அடிப்பது, ரயில் வண்டி ஓட்டுவதுபோல பந்துவீசும் தமிழக பவுலர்! சிரிக்கவைக்கும் ஆக்‌ஷன்!#video

Rishan Vengai

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் எஸ்.எஸ்.ராஜன் டி20 தொடரின் 2024 சீசனானது, கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் நடைபெற்று பிப்ரவரி 1ம் தேதி முடிவுக்கு வந்தது.

இறுதிப்போட்டியில் செங்கல்பட்டு மற்றும் ராணிபேட்டை அணிகள் மோதிய நிலையில், 152 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய செங்கல்பட்டு அணி 16 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

2024 எஸ்.எஸ்.ராஜன் டி20 தொடரானது நடந்து முடிந்து ஒருவாரம் ஆனாலும், திருவாரூர் அணிக்காக விளையாடிய பாலாஜி கே என்ற பந்துவீச்சாளரின் பவுலிங் ஆக்சனானது சமீபத்தில் ரசிகர்களின் அதிகப்படியான கவனத்தை பெற்றுள்ளது.

ஒரு ஓவரில் வீசப்படும் 6 பந்துவீச்சுக்கும் “நொண்டி அடிப்பது, ரயில் வண்டி ஓட்டுவது, பறவையைபோல பறப்பது, கையை தலைக்கு மேலேயே வைத்துக்கொண்டு வருவது, இரண்டு பக்க பவுலிங் க்ரீஸை அவ்வப்போது மாற்றிக்கொள்வது” என 6 விதமான ஆக்சனையும் ஒவ்வொரு ஓவருக்கும் செய்து பேட்ஸ்மேனின் கவனத்தை சிதற வைக்கிறார். அவருடைய இந்த பந்துவீச்சு ஆக்சன் பெரும்பாலான ரசிகர்களை அதிகம் சிரிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல், இந்தியாவின் மூத்த ஸ்பின்னரான அஸ்வினையும் கவர்ந்துள்ளது.

பாலாஜிதான் எனது புதிய அடிக்சன்! - அஸ்வின்

எஸ்எஸ் ராஜன் தொடரின் முன்னணி ஒளிபரப்பாளரான ஃபேன் கோட், பாலாஜியின் கேரம் பால் வீசும் ஸ்டைல் அப்படியே அஸ்வினை ஒத்திருப்பதாக, அவருடைய எக்ஸ் தள ஐடியை டேக் செய்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதைப்பார்த்த அஸ்வின் பாலாஜியின் பவுலிங் ஆக்சன்கள் பிடித்துப்போக, “பாலாஜி தான் எனது புதிய அடிக்சன்” என எழுதி பாலாஜியின் வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

ashwin instagram story

ஃபேன் கோடு பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு ஓவரில் வீசும் 6 பந்துவீச்சுக்கும் ஒவ்வொரு கை சைகையையும், 2 பந்துகளுக்கு ஒருமுறை பவுலிங் சைடையும் மாற்றிமாற்றி பந்துவீசுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜியின் புதுமையான ரன்னப் மற்றும் சைகைகளை பதிவிட்டு ஃபன் செய்துவருகின்றனர். நாம் சிறுவயதில் பந்துவீச்சும் பல முறைகளை ஞாபகப்படுத்தும் பாலாஜி, நம்மை அதிகமாக சிரிக்க வைக்கிறார்.

பொதுவாக டி20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களின் ஆட்டம் எனக்கூறப்படும் நிலையில், பந்துவீச்சாளர்களுக்கு இதுபோன்ற புதுமையான் விசயங்கள் தேவைப்படுகின்றது.