2025 ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரானது வரும் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ள தொடரில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் உள்ள ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம் பெற்றள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கான ஆசியக்கோப்பை ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள 17 பேர்கள் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
ஷாகீன் அஃப்ரிடி, அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், ஹசன் அலி உள்ளிட்ட வீரர்கள் அடங்கிய 17 வீரர்கள் கொண்ட அணிக்கு சல்மான் அலி ஆகா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2025 ஆசியக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:
சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது , ஃபஹீம் அஷ்ரப் , ஃபகர் ஜமான், ஹாரிஸ் ரவுஃப் , ஹசன் அலி, ஹசன் நவாஸ் , ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா , முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது சவாஸ், முகமது சவாஸ், முகமது வஸீம் ஜுனியர், ஃபர்ஹான், சைம் அயூப் , சல்மான் மிர்சா, ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் சுஃப்யான் மொகிம்