ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றி cricinfo
கிரிக்கெட்

331 ரன்களை சேஸ்செய்து வரலாறு படைத்த ஆஸ்திரேலியா.. இந்தியா போராடி தோல்வி!

இந்தியாவிற்கு எதிராக 331 ரன்களை சேஸ்செய்து வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா மகளிர் அணி.

Rishan Vengai

8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

3 போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி 2 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.

2025 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை

இந்நிலையில் இன்றைய 4வது லீக் போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்திய அணி.

வரலாற்று வெற்றியை பதிவுசெய்த ஆஸ்திரேலியா..

2025 மகளிர் உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பேட்டிங் செய்த இந்திய அணி 330 ரன்கள் சேர்த்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களும், பிரதிகா 75 ரன்களும் அடித்தனர்.

ஸ்மிரிதி மந்தனா

331 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அலிசா ஹீலி 107 பந்தில் 142 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

அலிசா ஹீலி

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸ்செய்து ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.