smriti mandhana
smriti mandhanaweb

அதிவேகமாக 5000 ODI ரன்கள்.. வரலாறு படைத்த ஸ்மிரிதி மந்தனா!

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாகவும், குறைந்த வயதிலும் 5000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா.
Published on
Summary

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாகவும், குறைந்த வயதிலும் 5000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா.

இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரரான ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து உலக கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார்.

சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய மந்தனா, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 அனைத்து வடிவத்திலும் சதமடித்த முதல் இந்திய வீராங்கனையாக வரலாறு படைத்தார்.

ஸ்மிரிதி மந்தனா
ஸ்மிரிதி மந்தனா

இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை போட்டியில் 2 உலகசாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.

smriti mandhana
ODI கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை படைத்த ஸ்மிரிதி மந்தனா!

அதிவேகமாக 5000 ரன்கள் அடித்து சாதனை..

2025 மகளிர் உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பேட்டிங் செய்த இந்திய அணி 330 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசி 80 ரன்கள் குவித்தார்.

Smriti mandhana
Smriti mandhana

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை கடந்த மந்தனா, நடப்பாண்டில் 1000 ODI ரன்களை பதிவுசெய்து வரலாற்று சாதனை படைத்தார்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆண்டில் 1000 ரன்கள் அடித்த முதல் வீராங்கனை மற்றும் அதிவேகமாக 112 இன்னிங்ஸில் 5000 ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற 2 உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இளம்வயதில் இந்த சாதனையை படைத்த வீராங்கனையாகவும் சாதனை படைத்துள்ளார்.

smriti mandhana
”ODI போட்டிகளில் விளையாட விரும்புகிறேன்..” - பயிற்சியாளர் சொன்னதை பகிர்ந்த ஜடேஜா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com