ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து மகளிர் அணி, 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 1 டெஸ்ட் போட்டி கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது.
முதலில் தொடங்கப்பட்ட 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என வென்ற ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று தொடங்கியது.
சிட்னியின் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. விக்கெட் கீப்பர் பெத் மூனி 11 பவுண்டரிகள் விளாசி 51 பந்தில் 75 ரன்களை குவிக்க 20 ஓவர் முடிவில் 198 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.
199 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் இருவரும் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். அதற்குபிறகு வந்த வீரர்கள் என்ன தான் போராடினாலும் 16 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 141 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
57 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டி20 போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.