india - pakistan ani
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு| ரத்து செய்யப்பட்ட போட்டிகள்.. அரையிறுதிக்கு சென்ற இந்தியா, பாகிஸ்தான்!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் காலிறுதிப்போட்டியில் விளையாடாமலேயே அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றன.

Rishan Vengai

2026 ஆசிய விளையாட்டில் இடம்பெறும் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

2026 ஆசிய விளையாட்டின் ஒரு அங்கமாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட கிரிக்கெட் நாடுகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஓமன், ஹாங்காங், மலேசியா மற்றும் நேபாள் உள்ளிட்ட 10 அணிகள் மொத்தமாக பங்கேற்றுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட 4 அணிகள் நேரடியாக காலிறுதிப்போட்டியில் விளையாடும் நிலையில், மற்ற அணிகள் லீக் சுற்றுப்போட்டிகளில் மோதின.

இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த இந்தியா-ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் - ஹாங்காங் காலிறுதிப்போட்டிகள் மழை காரணமாக டாஸ் போடப்படாமலயே ரத்து செய்யப்பட்டன. இதன்மூலம் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடாமலேயே அரையிறுதிக்கு தகுதிபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடக்கவிருக்கும் இலங்கை - நேபாள், வங்கதேசம்-மலேசியா காலிறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிகள் இந்தியா, பாகிஸ்தானை அரையிறுதியில் எதிர்கொள்வார்கள்.