இந்திய டி20 அணி x
கிரிக்கெட்

’இப்படியே போனால் இந்திய அணியின் சோலி முடிஞ்சிடும்..’ எச்சரிக்கை விடுத்த முன்னாள் வீரர்!

அணியில் செய்யப்படும் அதிகப்படியான மாற்றங்கள் இந்திய அணியை டி20 வடிவத்தில் சவாலான நிலைக்கு தள்ளுவதாக முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

Rishan Vengai

இந்தியா டி20 உலகின் நம்பர் 1 அணியாக இருந்தும், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்து தொடரை 0-2 என இழந்ததுடன், இங்கிலாந்து தொடரிலும் மூன்று போட்டிகளில் வெற்றியில்லாமல் திணறுகிறது. சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை தொடர்ச்சியாக நீக்கும் முடிவுகள் அணியின் நம்பிக்கையை சிதைக்கின்றன. ரவிச்சந்திரன் அஸ்வின், ஜோஸ் பட்லர் உதாரணம் காட்டி, வீரர்களை நீண்ட காலம் பேக் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார்.

உலகின் நம்பர் 1 டி20 அணியாக இருக்கும் இந்தியா மற்றும் உலகின் நம்பர் 2 அணியாக இருக்கும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மோதல் என்பது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்து தொடரை 0-2 என முழுமையாக இழந்த இந்திய அணி, இங்கிலாந்து தொடரிலும் அதையே பிரதிபலித்துவருகிறது. இதுவரை 3 போட்டிகள் கடந்துள்ள நிலையில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றிபெறவில்லை, அதிலும் 3வது டி20 போட்டியில் 76 ரன்னில் சுருண்டதோடு 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்திருப்பது இந்தியாவை ஒரு அழிவின் பாதைக்கு அழைத்துச்சென்றுள்ளது.

india t20 team

முக்கியமாக 2026 டி20 உலகக்கோப்பையில் நாக் அவுட் போட்டிகளில் அற்புதமாக விளையாடி கோப்பை வெல்ல காரணமாக இருந்த சஞ்சு சாம்சன் ஆடும் லெவனிலிருந்து நீக்கப்பட்டது, ஆட்டத்தின் போது திலக் வர்மாவிற்கு முன்பு அக்சர் பட்டேலும், ஷிவம் துபேவிற்கு முன்பு ஹர்சித் ராணாவை களமிறக்கியது போன்ற விசயங்கள் பேசுபொருளாக மாறின.

ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தசூழலில் அணியில் அடிக்கடி செய்யப்படும் மாற்றங்கள் தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியிருக்கும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “சஞ்சு சாம்சன் 3 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்பதற்காக நீக்கிவிட்டார்கள், தற்போது சூர்யவன்ஷி சரியாக விளையாடவில்லை என்பதற்காக நீக்கிவிடுவார்களா? டெஸ்ட் போன்ற வடிவத்திலேயே வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து பேக் செய்வது முக்கியமானதாக இருக்கும்போது, டி20 போன்ற ஹை-ரிஸ்க் ஆட்டத்தில் வீரர்களை அதிகமாக பாதுகாக்க வேண்டும். இப்படி அணியில் இருக்கும் வீரர்களை அடிக்கடி மாற்றினால், இந்திய அணியால் போட்டிகளை வெல்லமுடியாது. நீங்கள் இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை இறக்கினாலும் அவர்களிடமும் இதே ரிசல்ட் தான் கிடைக்கும். அடுத்த உலகக்கோப்பையில் வெவ்வேறு கண்டிசன்களில் விளையாடவேண்டும் என்பதால் வீரர்களை தொடர்ந்து பேக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். உதாரணமாக இங்கிலாந்து அணியில் கடந்த 2 வருடங்களாக ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடவில்லை, ஆனால் அவர்கள் தொடர்ந்து பேக் செய்கிறார்கள். அவரும் தன்னுடைய இடம் பற்றி கவலைபடாமல் டி20 வடிவத்தில் ஆக்ரோசமாகவே விளையாடிவருகிறார். அந்த நிலைமையை இந்திய அணி கடைபிடிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.