2026 ஐபிஎல் மினி ஏலத்தில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் வலுவான போட்டியாக இருக்கப்போகின்றன. அஸ்வின், சிஎஸ்கே அணிக்கு ஆண்ட்ரே ரஸ்ஸலை குறிவைக்க வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். ஜடேஜா மற்றும் பதிரானா போன்ற வீரர்களை வெளியேற்றியதால், சிஎஸ்கே அணிக்கு ஃபினிசிங் மற்றும் ஆல்ரவுண்டர் தேவையாக இருக்கும்.
2026 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற இருக்கிறது. மினி ஏலத்தை முன்னிட்டு ஐபிஎல்லில் உள்ள 10 அணிகளும் தங்களுடைய தக்கவைப்பு மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன..
பல முக்கியமான வீரர்களை வெளியேற்றியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மிகப்பெரிய பர்ஸ் தொகையுடன் மினி ஏலத்தில் களமிறங்கவிருக்கின்றன..
5 முறை சாம்பியனான சிஎஸ்கேவிடம் 43.4 கோடி ரூபாயும், 3 முறை சாம்பியனான கேகேஆர் இடம் 64.3 கோடி ரூபாயும் மீதம் உள்ளன.. நம்பிக்கை வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸலை கேகேஆர் அணியும், பதிரானாவை சிஎஸ்கே அணியும் வெளியேற்றியுள்ளன..
இந்நிலையில் 2026 ஐபிஎல் மினி ஏலம் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே வலுவான போட்டியாக இருக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. இந்தசூழலில் சிஎஸ்கே அணி ஜடேஜா விட்டுச்சென்ற வெற்றிடத்தை எப்படி நிரப்பப்போகிறது என்ற கேள்வியை முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் எழுப்பியுள்ளார்..
ஜடேஜா மற்றும் பதிரானா போன்ற மேட்ச் வின்னிங் வீரர்களை சென்னை அணி வெளியேற்றி இருப்பதால் அவர்களுக்கு ஃபினிசிங் மற்றும் ஸ்பின் ஆல்ரவுண்டர் அல்லது பேஸ் ஆல்ரவுண்டர் தேவையாக இருக்கும்.. இந்தசூழலில் வெளியேற்றப்பட்டிருக்கும் வீரர்கள் பட்டியலில் ஆண்ட்ரே ரஸ்ஸல், க்ளென் மேக்ஸ்வெல், காம்ரூன் க்ரீன் மற்றும் டேவிட் மில்லர் போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியின் விருப்பமான வீரர்களாக இருப்பார்கள்..
இந்தசூழலில் தன்னுடைய ஹிந்தி யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை அணி ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு செல்லலாம் என யோசனை தெரிவித்துள்ளார். எப்படியும் சிஎஸ்கே அணிக்கு போட்டியாக கேகேஆர் அணி இருக்கும் என்பதால் ஏலத்தில் அலெர்ட்டாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து பேசியிருக்கும் அஸ்வின், “2026 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வலுவான போட்டியாக கேகேஆர் இருக்கும்.. எனக்கு தெரிந்து காம்ரூன் க்ரீன் சிஎஸ்கேவை விட கேகேஆர் அணிக்கு தான் தேவையான வீரராக இருப்பார்.. சிஎஸ்கே அணியில் க்ரீனால் ஃபினிசிங் வீரராக விளையாட முடியாது, அவர் ஃபினிசிங் வீரரும் கிடையாது.. கேகேஆர் அணி வெங்கடேஷ் ஐயரை வெளியேற்றி இருப்பதால், காம்ரூம் க்ரீன் கேகேஆர் அணிக்கு முக்கியமான வீரராக இருப்பார்..
அதனால் ஏலத்தின் போது க்ரீனின் விலையை சிஎஸ்கே அணி ஏற்றிவிடவேண்டும்.. அப்படி நடந்தால் தான் சென்னை அணியால் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு முழுவீச்சில் செல்லமுடியும்.. சேப்பாக்கத்தில் கிடைக்கும் பவுன்ஸால் பவுலிங் மற்றும் சிறந்த ஃபினிசிங் போன்றவற்றிற்கு ரஸ்ஸல் சிறந்த தேர்வாக இருப்பார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் கேகேஆர் அணிக்கு காம்ரூர் க்ரீன் மற்றும் பதிரானா இருவரும் சிறப்பாக ஃபிட் ஆவார்கள் என்பதால், அந்த 2 பேருக்கு அதிக தொகையை செலவிடுவார்கள் என அஸ்வின் கூறியுள்ளார்..