ind vs pak pt
கிரிக்கெட்

”இதுமட்டும் நடந்தால் இந்தியா வெல்வது கடினம்..” - 4 செமிஃபைனல் அணிகளை தேர்வு செய்த அஸ்வின்!

துபாய் ஆடுகளத்தில் இந்தியாவிற்கு இருமுனை கத்தி போட்டிகளாகவே அமையும் என ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரித்துள்ளார்.

Rishan Vengai

ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது இந்தாண்டு பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 09-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது.

ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.

champions trophy

முதல் போட்டி கராச்சியில் பிப்ரவரி 19-ம் தேதியன்று நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் அரையிறுதிக்கு தகுதிபெறக்கூடிய 4 அணிகளை தேர்வுசெய்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியாவிற்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்..

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியா அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடவிருப்பதால், அவர்களுக்கு டாஸ் வெல்வது முக்கியமான விசயமாக இருக்கும் என தெரிவித்தார். ஒருவேளை டாஸை தோற்று, முதலாவதாக பேட்டிங் செய்தால் இந்தியாவிற்கு பெரிய பாதகமான சூழல் அமையும் என எச்சரித்துள்ளார்.

2025 champions trophy

துபாயில் பகலிரவு ஆட்டமாக நடைபெறும் சூழலில், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு பந்துவீச்சு கடினமானதாக இருக்கும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் அரையிறுதிக்கு செல்லக்கூடிய 4 அணிகளாக, குரூப் ஏ-ல் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து, குரூப் பி-ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.