ருதுராஜ் கெய்க்வாட் - அஸ்வின் pt
கிரிக்கெட்

திறமை இருந்தும் கெய்க்வாட்டுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை..? அஸ்வின் சொன்ன முக்கிய காரணம்!

இந்திய அணியில் 2024-ம் ஆண்டு கடைசியாக விளையாடிய கெய்க்வாட்டுக்கு தற்போதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை..

Rishan Vengai

ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் வாய்ப்பு பெறாததற்கான காரணங்களை ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கினார். அவர் யூடியூப் சேனலில் பேசியபோது, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற திறமையான வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது தனக்கு வருத்தமாக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் டி20 அணியிலிருந்து விராட் கோலி ஓய்வுபெற்றபிறகு அந்த இடத்திற்கு சரியான வீரர் ருதுராஜ் கெய்க்வாட் என்று சொல்லப்பட்டது.. காரணம் விராட் கோலியை போலவே நிலைத்துநின்றும், அதேவேளையில் அதிரடியாகவும் ஆடக்கூடிய திறமை கொண்டவர் ருதுராஜ் என்பதால் இந்த கருத்து பெரும்பாலும் வைக்கப்பட்டது..

2024 t20 world cup champion india

அதேபோல கடந்த 2024 டி20 உலகக்கோப்பையை வென்றதற்குபிறகு விராட் கோலி ஓய்வை அறிவித்தபோது, அடுத்த ஜிம்பாப்வேவிற்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நம்பர் 3 மற்றும் நம்பர் 4 இடங்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.. அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் 77 மற்றும் 49 ரன்கள் அடித்து அசத்தினார்..

ஆனால் அதற்கு பிறகு இந்திய அணியிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் ஓரங்கட்டப்பட்டார். அவருக்கான வாய்ப்புகளும் இன்னும் இந்திய அணியில் வழங்கப்படவில்லை..

இந்தசூழலில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்..

ருதுராஜை நினைத்தால் வருத்தமாக உள்ளது..

ருதுராஜ் கெய்க்வாட் குறித்து யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், ருதுராஜ்க்கு ஏன் இந்தியா ஏ அணியில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற கேள்விகள் அதிகம் எழுப்பப்படுவது குறித்து பேசினார்..

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “ருதுராஜ் கெய்க்வாட்டின் தரத்தைப் பற்றி நாம் பேசத் தேவையில்லை. அவர் எல்லா ஷாட்களையும் தன்னுடைய புத்தகத்தில் வைத்திருக்கிறார். கடைசி டி20 தொடருக்குப் பிறகு அவர் ஏன் களத்தில் இல்லை என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் கடைசி டி20 போட்டியில் விளையாடியபோது, ​​பயிற்சியாளர் வேறு, கேப்டன் வேறு. பிரச்சினை என்னவென்றால், அத்தகைய வீரர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றால், அவர்கள் பெரும்பாலும் இருளில் விடப்படுவார்கள். அவருடன் பேசியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் சிவப்பு பந்து வடிவத்திலும் அற்புதமாக பேட்டிங் செய்கிறார். தற்போது இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருப்பதால், அவரை அவர்கள் மிடில் ஆர்டர் வீரராக கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என பேசியுள்ளார்..

ashwin set to play ILT20

மேலும் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், பிரியான்ஸ் ஆர்யா போன்ற பல வீரர்கள் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ருதுராஜ் கெய்க்வாட் போன்ற திறமையான வீரருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருடைய திறமையை சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்தமுடியவில்லை என்பது எனக்கு உண்மையில் வருத்தமாக இருக்கிறது என அஸ்வின் பேசியுள்ளார்..

ருதுராஜ் கெய்க்வாட்

ருதுராஜ் கெய்க்வாட் சர்வதேச டி20 போட்டிகளில் 20 இன்னிங்ஸ்களில் விளையாடி 39.56 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களுடன் 633 ரன்கள் குவித்துள்ளார். அவருடைய பேட்டிங் ஸ்டிரைக்ரேட் 143ஆக உள்ளது. அதேபோல ஒட்டுமொத்த டி20 போட்டிகளிலும் 6 சதங்கள் 35 அரைசதங்களுடன் 39.33 சராசரியுடன் 4996 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் ஸ்டிரைரேட் 140ஆக உள்ளது..