dc, dd, kkr web
கிரிக்கெட்

முதல் 6 போட்டியில் 0 வெற்றியை பதிவுசெய்த 5 அணிகள்.. பட்டியலில் உள்ள 5 முறை சாம்பியன்!

2026 ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளுக்கு பின்பும் ஒரு வெற்றியை கூட பதிவுசெய்யாமல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தடுமாறி வரும் நிலையில், இதற்கு முன்பும் 5 அணிகள் இதேபோலான மோசமான நிலையில் இருந்துள்ளன..

Rishan Vengai

ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளுக்குப் பின் 0 வெற்றியுடன் மோசமான சாதனை படைத்த 5 அணிகள் குறித்து இந்த செய்தி விளக்குகிறது. 2009 சாம்பியன் டெக்கான் சார்ஜர்ஸ் முதல் இப்போது கேகேஆரின் பரிதாப நிலை வரை 5 அணிகள் இப்பட்டியலில் நீடிக்கின்றன.

ஐபிஎல்லில் 3 முறை கோப்பை வென்றிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனில் முழுமையாக சரிந்து 6 போட்டிகளில் ஒரு வெற்றியும் பெறாமல், மழையால் ரத்தான பஞ்சாப் கிங்ஸ் போட்டியிலிருந்து கிடைத்த ஒரே புள்ளியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திணறி வருகிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் அனைத்திலும் அவர்களின் தோல்வி தொடர்கிறது.

KKR, 2026

கொல்கத்தா அணிக்கு யாராவது வெற்றியை தேடித்தர மாட்டார்களா என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தாலும், அப்படி எல்லாம் எதிர்ப்பார்க்காதீங்க நாங்க வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கே இல்லை என்பது போல்தான் அனைத்து போட்டிகளிலும் நைட் ரைடர்ஸ் அணி விளையாடிவருகிறது.

இந்நிலையில் இதற்கு முன்பு எத்தனை அணிகள் முதல் 6 போட்டிக்கு பின் 0 வெற்றியை பதிவுசெய்துள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்..

மோசமான பட்டியலில் உள்ள 5 அணிகள்..

ஐபிஎல் தொடரில் முதல் 6 போட்டிக்கு பின்பு ஒரு வெற்றியை கூட பெறாத சம்பவங்களை 5 அணிகள் இதுவரை செய்துள்ளன. இந்த அணிகள் அப்படியான தொடர் தோல்விகளுக்கு பிறகு மீண்டு வந்ததே இல்லை. அனைத்து சீசனிலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையே நிறைவுசெய்தன.

டெக்கான் சார்ஜர்ஸ் (2012)

1. டெக்கான் சார்ஜர்ஸ் (2012) - 2009 சீசனில் கோப்பை வென்ற டெக்கான் அணி, 2012 ஐபிஎல்லில் தொடர்ந்து 6 தோல்விக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கும் முந்தைய இடத்தை பிடித்தது.

டெல்லி டேர்டெவில்ஸ் (2013)

2. டெல்லி டேர்டெவில்ஸ் (2013) - இந்த சீசனில் படுமோசமாக செயல்பட்ட ஜெயவர்தனே தலைமையிலான டெல்லி அணி, முதல் 6 போட்டியில் மட்டுமில்லாமல் கடைசி 6 போட்டியிலும் வரிசையாக தோற்றது. இவர்கள் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தனர்.

ஆர்சிபி (2019)

3. ஆர்சிபி (2019) - கோலி தலைமையில் படுமோசமாக செயல்பட்ட ஆர்சிபி அணி, 2013 சீசனைல் தொடர்ச்சியாக 6 தோல்விகளை பெற்று கடைசி இடத்தில் முடித்தது.

மும்பை இந்தியன்ஸ் (2022)

4. மும்பை இந்தியன்ஸ் (2022) - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி, 2022 சீசனில் மிகப்பெரிய டவுன்ஃபாலை சந்தித்தது. அவர்கள் முதல் 8 போட்டியிலும் தோல்வியை தழுவினர், இது படுமோசமான ஒரு தோல்வியாகும்.

KKR, 2026

5. கேகேஆர் (2026) - நடப்பு சீசனில் 0 வெற்றியுடன் தொடரும் கேகேஆர் அணி, அடுத்த போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்வதால் தோல்வியின் எண்ணிக்கை தொடரும் என்றே தெரிகிறது.