2025 ஆசியக்கோப்பை தொடரில் அற்புதமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்திய இந்திய வீரர் அபிஷேக் சர்மா, 7 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 314 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஆசியக்கோப்பை டி20 வரலாற்றில் ஒரு தொடரில் 300 ரன்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த அபிஷேக், தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் ஆசியக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் டி20 தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்று வரலாறு படைத்துள்ளார் அபிஷேக்.
ஐசிசி தரவரிசை பட்டியல் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், டி20 பேட்டிங் தரவரிசையில் 931 புள்ளிகள் பெற்றிருக்கும் அபிஷேக் சர்மா புதிய சாதனை படைத்தார்.
இதுவரை டி20 பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் பெற்ற 919 புள்ளிகளே அதிகபட்ச ரேட்டிங்காக இருந்த நிலையில், அதனை முறியடித்து அபிஷேக் சர்மா புதிய வரலாறு படைத்து அசத்தியுள்ளார்.
டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்:
1. அபிஷேக் சர்மா - இந்தியா - 931 புள்ளிகள்
2. டேவிட் மலான் - இங்கிலாந்து - 919 புள்ளிகள்
3. சூர்யகுமார் யாதவ் - இந்தியா - 912 புள்ளிகள்
4. விராட் கோலி - இந்தியா - 909 புள்ளிகள்
5. ஆரோன் பிஞ்ச் - ஆஸ்திரேலியா - 904 புள்ளிகள்
6. பாபர் அசாம் - பாகிஸ்தான் - 900 புள்ளிகள்