அபிஷேக் சர்மா 5 சிக்சர்களை அடித்து, ஒரு ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த சூர்யகுமார் யாதவின் சாதனையை சமன்செய்தார். 6 பந்துக்கு 1 சிக்சர் விகிதத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இந்தூரில் நடைபெற்றுவருகிறது. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்றது அவர்களுக்கு சாதகமாகவே பார்க்கப்பட்டது.
ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் அபிஷேக் சர்மா 69 ரன்கள் அடித்து வெளியேற, மறுமுனையில் 6 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசிய இஷான்கிஷனும் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, இந்தியா 15 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்துள்ளது.
இந்தசூழலில் 5 சிக்சர்களை அடித்த அபிஷேக் சர்மா ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரராக சூர்யகுமார் யாதவின் சாதனையை சமன்செய்துள்ளார். சூர்யகுமார் யாதவ் 2022ஆம் ஆண்டு 68 சிக்சர்கள் அடித்திருக்கும் நிலையில், நடப்பாண்டு அபிஷேக் சர்மாவும் 68 சிக்சர்களை அடித்துள்ளார். ஆனால் பட்டியலில் இருக்கும் இஷான் கிஷன், சஹிப்சதா ஃபர்ஹான் அனைவரையும் விட பந்துக்கு சிக்சர் அடிக்கும் விகிதம் அபிஷேக் சர்மாவிற்கே குறைவாக உள்ளது. சூர்யகுமார் 9 பந்துக்கு 1 சிக்சர் விகிதம் வைத்திருந்த நிலையில், அபிஷேக் சர்மா 6 பந்துக்கு 1 விகிதத்துடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
அதேபோல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.