pak vs eng England Cricket
கிரிக்கெட்

84-க்கு 7 விக்கெட்டுகள் காலி.. ஓரிலக்க ரன்னில் வெளியேறிய TOP 5 வீரர்கள்! பாகிஸ்தான் பரிதாபம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தான் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

Rishan Vengai

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் மூன்றாவது டெஸ்டில் பாகிஸ்தான் மீண்டும் சரிந்தது. பர்மிங்காமில் முதலில் பேட்டிங் செய்த அவர்கள் 101 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தனர். டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஓரிலக்க ரன்னில் அவுட்டாகினர். கேப்டன் பாபர் அசாம் 7 ரன்னில் வெளியேற, சவுத் சஹீல் மட்டும் 37 ரன்களுடன் தனியாக போராடினார். ஒலி ராபின்சன், ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகு பாதி அணி வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீட்டிற்கு அனுப்பியது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு 3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்றுவரும் 3வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் வழக்கம்போல பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை சீட்டுகட்டு போல சரிய விட்டது. பாகிஸ்தான் அணியின் டாப் 5 வீரர்கள் அனைவரும் ஓரிலக்க ரன்னிலும், பூஜ்ஜியம் ரன்னிலும் அவுட்டாகி நடையை கட்டினர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 7 ரன்னில் அவுட்டாக, தனியாளாக போராடிவரும் சவுத் சஹீல் 37 ரன்கள் அடித்து போராடி வருகிறார். கடைசி அப்டேட்டின் படி 101 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் விளையாடிவருகிறது. ஒலி ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.