ind vs nz bcci / screenshot
கிரிக்கெட்

2வது டி20 போட்டி| இந்தியாவிற்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 180 ரன்களை அடித்துள்ளது நியூசிலாந்து அணி.

Rishan Vengai

நியூசிலாந்து அணியின் பிலிப்ஸ் மற்றும் ஜாக்கப்ஸ் ஜோடி அரைசதமடித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, 20 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு 181 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் மொத்தமாக 445 ரன்கள் அடிக்கப்பட்ட நிலையில், இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர்களுடைய சிறந்த சேஸிங்கை பதிவுசெய்தது.

இந்தசூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்றும், அதே கிறிஸ்ட்சர்ச் மைதானத்திலேயே நடந்துவருகிறது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. 41 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும் கடந்த போட்டியில் மிரட்டிய பிலிப்ஸ் மற்றும் ஜாக்கப்ஸ் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது. இருவரும் அரைசதமடித்து அசத்த 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை சேர்த்தது நியூசிலாந்து அணி.