முதல் ஒருநாள் சதமடித்தார் ஜெய்ஸ்வால் web
கிரிக்கெட்

23 வயதில் TEST, T20 & ODI மூன்றிலும் சதம்.. முதல் ஒருநாள் சதமடித்தார் ஜெய்ஸ்வால்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்..

Rishan Vengai

23 வயது ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஏற்கனவே சதமடித்துள்ள அவர், ஒருநாள் வடிவத்திலும் சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற தென்னாப்பிரிக்கா அணி, இந்தியாவை அவர்களின் சொந்தமண்ணில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தொடரை வென்று சாதனை படைத்தது.

டிகாக் - இந்திய அணி

தொடர்ந்து நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் 1-1 என தொடர் சமனிலையில் உள்ளது..

இந்நிலையில் தொடர் யாருக்கு என்ற முடிவை எட்டும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியானது விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.

முதல் ஒருநாள் சதமடித்த ஜெய்ஸ்வால்!

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, டிகாக்கின் 23வது ஒருநாள் சதத்தின் உதவியால் 270 ரன்கள் குவித்தது. 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடித்த டிகாக் 106 ரன்கள் குவித்தார். குல்தீப் மற்றும் பிரசித் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ரோகித் சர்மா

271 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதமடித்து 100 ரன்கள் பார்டன்ர்ஷிப் போட்டு அசத்தினர்.

இரண்டு பேரும் சதமடிப்பார்கள் என நினைத்தபோது ரோகித் சர்மா 75 ரன்கள் அடித்தபோது அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 23 வயதேயான ஜெய்ஸ்வால், நிதானமாக தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய ஜெய்ஸ்வால், சர்வதேச் டி20 சதத்தையும் அடித்துள்ளார். ஆனால் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பே கிடைக்காமல் இருந்துவந்தது. 3 வடிவத்திற்குமான வீரராக ஜெய்ஸ்வால் இருப்பார், அவருக்கு ஒருநாள் வடிவத்திலும் வாய்ப்பு கொடுங்கள் என்ற குரல் வலுத்த நிலையில் தற்போது ஒருநாள் வடிவத்திலும் சதமடித்து மிரட்டியுள்ளார்..