2026 மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நட்சத்திர வீரர்கள் கொண்ட இவ்விரு அணிகளும் கோப்பைக்காக கடுமையாகப் போராடுகின்றன. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
2026 மகளிர் பிரீமியர் லீக் தொடரானது பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 4வது WPL கோப்பைக்காக மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, உபி வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜியண்ட்ஸ் முதலிய 5 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், முதல் 5 போட்டிகளிலும் ஒரு தோல்வி கூட இல்லாமல் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை தோற்கடித்த டெல்லி கேபிடல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து வது முறையாக தகுதிபெற்று அசத்தியது.
இந்தசூழலில் கோப்பை யாருக்கு என்ற ஹை-லெவல் போட்டியில் இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இரண்டு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருக்கும் நிலையில், யாருக்கு கோப்பை செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.
இந்நிலையில் வதோதராவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவிருக்கிறது.
டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் (விளையாடும் லெவன்): லிசெல் லீ (கீப்பர்), ஷஃபாலி வெர்மா, லாரா வால்வார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (கேப்டன்), மாரிசேன் காப், சினெல்லே ஹென்றி, நிகி பிரசாத், சினே ராணா, மின்னு மணி, ஸ்ரீ சரணி, நந்தனி ஷர்மா
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பெண்கள் (விளையாடும் லெவன்): கிரேஸ் ஹாரிஸ், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஜார்ஜியா வோல், ரிச்சா கோஷ்(கீப்பர்), ராதா யாதவ், நாடின் டி கிளர்க், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, சயாலி சத்கரே, ஷ்ரேயங்கா பாட்டீல், லாரன் பெல்