கேல் ரத்னா விருது எக்ஸ் தளம்
விளையாட்டு

குகேஷ் உட்பட 4 விளையாட்டு வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கிய குடியரசுத் தலைவர்!

உலக செஸ் சாம்பியன் குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு நாட்டின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

PT WEB

உலக செஸ் சாம்பியன் குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு நாட்டின் உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் விளையாட்டில் சாதித்த நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சாரியா விருதுகளும், சிறப்பாக செயல்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது மற்றும் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகளும் வழங்கப்பட்டன.

இதில், செஸ் சாம்பியன் குகேஷ், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றார். அப்போது, அங்கிருந்தவர்கள் கைதட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்ச்சியாக ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் மற்றும் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் 2 பதக்கங்களை வென்ற மனு பாக்கர் ஆகியோருக்கும் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. தடகளம், குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் சாதனை புரிந்த வீரர்களுக்கு அர்ஜூனா விருதுகளும் வழங்கப்பட்டன.