FOOTBALL+ அகாடமி சார்பில் சென்னையில் கால்பந்து வளர்ச்சி குறித்து இரண்டு நாள் கருத்தரங்கு மார்ச் மாதம் நடைபெறுகிறது.
சென்னையை சார்ந்த FOOTBALL+ அக்காடமி, பிரேசில் நாட்டின் விளையாட்டு அகாடமியுடன் இணைந்து இந்தியாவின் கால்பந்து எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்து இரண்டு நாள் கருத்தரங்கை மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 1 என இரண்டு நாட்கள் நடத்த உள்ளனர்.
சென்னையில் நடைபெற உள்ள இரண்டு நாள் கருத்தரங்கில் சர்வதேச வீரர்கள் மற்றும் கால்பந்து நிபுணர்கள், இந்தியாவின் கால்பந்து வளர்ச்சி அடைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கட்டமைப்பு வளர்ச்சி, கால்பந்து மூலம் உருவாகும் வருவாய் குறித்து பேச உள்ளனர்.
இது மட்டும் இல்லாமல் 2002ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை வென்ற பிரேசில் அணி வீரர்கள், ஓய்வுபெற்ற இந்தியாவின் முன்னாள் வீரர்களுடன் நேரு மைதானத்தில் நடைபெறும் கால்பந்து போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்த போட்டி மார்ச் மாதம் 30ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
கால்பந்து வரலாற்றில் சிறந்த வீரர்களாக பார்க்கப்படும் ரொனால்டோ, ரொனால்டினோ, CAFU, ரிவல்டோ உள்ளிட்ட வீரர்கள் இந்த போட்டியில் விளையாட உள்ளனர்.