திருநள்ளாறு PT WEP
ஆன்மீகம்

திருநள்ளாறு சனீஸ்வர ஆலய முகநூல் பக்கம் ஹேக்... ஆபாசப் படம் பதிவேற்றம்; அதிர்ச்சியில் பக்தர்கள்!

திருநள்ளாற்றில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய தேவஸ்தான முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து ஆபாச புகைப்படத்தைப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PT WEB

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆலயத்தின் தேவஸ்தான முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து ஆபாச புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம்

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் தேவஸ்தானம் அதிகாரிகள் காரைக்கால் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தேவஸ்தான முகநூல் பக்கத்திலிருந்த அந்த ஆபாச புகைப்படங்களை உடனடியாக நீக்கியதாகத் தகவல் தெரிவித்தனர். ஆனால் மீண்டும் முகநூல் பக்கத்தில் ஆபாச புகைப்படம் பதிவேற்றம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலய தேவஸ்தான முகநூல் பக்கத்தில் ஆபாச புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.