mg astor 2024
mg astor 2024 pt
மோட்டார்

5 புதிய வசதிகளுடன் 5 Variants-ல் வெளியானது MG ASTOR 2024 கார்.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

யுவபுருஷ்

100 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய நிறுவனமான எம்ஜி, இன்று இந்தியாவில் தனது மேம்படுத்தப்பட்ட ‘எம்ஜி ஆஸ்டர் 2024’ காரை அறிமுகம் செய்துள்ளது. காற்றோட்டமான இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் கூடுதல் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் உள்ளன. நல்ல அனுபவத்திற்காக மேம்படுத்தப்பட்ட யூஸர் இன்டர்ஃபேஸுடன், i-SMART 2.0 பொருத்தப்பட்டது . ஷைன், செலக்ட், ஷார்ப் ப்ரோ மற்றும் சேவி ப்ரோ போன்ற புதிய வேரியண்ட்டுகளில் AI அம்சம் கொண்ட இந்தியாவின் முதல் காராக இது அமைந்துள்ளது.

மேலும், வானிலை, கிரிக்கெட், கால்குலேட்டர்கள், கடிகாரங்கள் மற்றும் செய்தி போன்றவற்றுக்கான அட்வான்ஸ்டு வாய்ஸ் கமாண்டுகளும் இதில் உள்ளன. டிஜிட்டல் கீ செயல்பாட்டுடன் கூடிய திருட்டு தடுப்பு அம்சம், நெட்வொர்க் இணைப்பு கிடைக்காதபோதும் கூட பாதுகாப்பை உறுதிசெய்கிறது.

எம்ஜி-ன் துணை நிர்வாக இயக்குனர் கவுரவ் குப்தா பேசுகையில், “லேட்டஸ்ட் ஆட்டோமொபைல் தொழில்நுட்பங்களைக் கொண்ட வாகனங்களுடன் எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த வாக்குறுதியைக் கடைப்பிடித்து, இந்த ஆண்டு எங்கள் 100 ஆண்டுகால பயணத்தை கொண்டாடும் வகையில், புதிய எம்ஜி ஆஸ்டர் 2024 கார் வாங்குபவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன” என்றார். எம்ஜி ஆஸ்டர், 49 உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இதன் பிரீமியம் உட்புறங்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப்கள் ஓட்டுநருக்கு நல்ல அனுபவத்தை வழங்கும் என்று தெரிகிறது. இவற்றின் தொடக்க விலை  ₹9.98 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.