லாட்ஜில் புகுந்து தாக்குதல்.. கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை! கர்நாடகாவில் கொடூர சம்பவம்!

லாட்ஜில் அறை எடுத்து தங்கிய ஆண், பெண் நண்பர்களை சரமாரியாக தாக்கிய இளைஞர்கள்.. ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. கணவனுடன் வந்து புகார் அளித்த பெண்.. எங்கு நடந்தது? முழு விவரங்களை பார்க்கலாம்.
victim lady
victim ladypt

கர்நாடக மாநிலம் ஹாவேரி ஹனகல் நகரில் இருக்கும் ஒரு லாட்ஜுக்கு, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது ஆண் நண்பருடன் கடந்த 8ம் தேதி சென்றுள்ளார். இதில் பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர், ஆண் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. நண்பர்கள் இருவரும் லாட்ஜில் அறை கேட்டபோது ரிசப்ஷனில் இருந்த இஸ்லாமிய இளைஞர்கள், இவர்களை நோட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே நண்பர்கள் இருவரும் அறைக்குச் சென்றபிறகு, அவர்களை பின் தொடர்ந்து சென்றவர்கள், லாட்ஜ் ஊழியர்கள் வந்துள்ளோம். தண்ணீர் வரவில்லையாமே, கதவை திறவுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதற்கு உள்ளே இருந்தவரோ, தண்ணீர் வருகிறது என்று பதிலளிக்க, கதவை திறக்குமாறு இளைஞர்கள் கூறியுள்ளனர். அவர் கதவை திறந்ததும், உள்ளே சென்ற இளைஞர்கள், இருவரையும் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து, இருவரையும் லாட்ஜில் இருந்து வெளியே இழுத்து வந்து, தாக்கியுள்ளனர். நம் மதத்தைச் சேர்ந்த பெண் வேற்று மதத்தை சேர்ந்தவருடன் தங்குவதா என்ற கோணத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இதுதொடர்பான வீடியோவை அவர்களே வெளியிட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

victim lady
‘20 ஆண்டுகள் சிறை’ - தீர்ப்பை கேட்டு நீதிமன்ற வளாகத்திலேயே விபரீத முடிவெடுத்த குற்றவாளிகள்!

இதற்கிடையே தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமிய பெண், அவர்கள் மதத்தைச் சேர்ந்த வாலிபர்களாலேயே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீஸில் புகார் அளித்த அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. லாட்ஜின் அறையில் புகுந்து இருவரையும் சரமாரியாக தாக்கிய இளைஞர்கள், அங்கிருந்த ஆண் நண்பரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டுள்ளனர். அந்த பெண்ணை தனி காரில் ஏற்றிய 7 இளைஞர்கள், ஆற்றங்கரையில் வைத்து அந்த பெண்ணை ஒவ்வொருவராக கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர்.

பிறகு அங்கிருந்து ஒரு வனப்பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஓரம் அழைத்து வந்து, ஷிரா பகுதிக்கு செல்லும் பேருந்தில் அந்த பெண்ணை ஏற்றி அனுப்பிவிட்டு தப்பியுள்ளனர். இந்நிலையில், தனது சொந்த ஊருக்குச் சென்ற பெண், கணவரிடம் தனக்கு நடந்த கொடுமையை கூறி அழுதுள்ளார்.

victim lady
CSK-ன் 14 கோடி வீண்போகாது! டி20-ல் ருத்ரதாண்டவம் ஆடிய டேரில் மிட்செல்! கதிகலங்கிய பாகிஸ்தான்!

அப்போது, கணவன், மனைவி இருவரும் காவல்நிலையத்திற்கு சென்று இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். புகாரில், “ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரது அந்தரங்க உறுப்பிலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இத்தகைய கொடுமையை அரங்கேற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வரும் நிலையில், இச்சம்பவத்தில் ஈட்டுப்பட்டது ஹாநகள் தாலுகாவைச் சேர்ந்த அக்கி ஆளுரின அல்தாப் மற்றும் மர்தான் சாப் உள்பட பலர் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

victim lady
பட்டுக்கோட்டை ஆணவக்கொலை வழக்கு – மேலும் 3 உறவினர்கள் கைது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com