Mercedes Benz Electric G-Class G580 WEB
கார்

அறிமுகமானது புதிய Electric G-Class Mercedes Benz..!

EQ தொழில்நுட்பத்துடன் கூடிய Mercedes-Benz G-Class எலக்ட்ரிக் SUV ரூ. 3 கோடியில் அறிமுகம்.

துர்கா பிரவீன் குமார் .பூ

EQ தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய முழு-மின்சார G-கிளாஸ் காரை இந்தியாவில் ரூ. 3 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் G-Class SUV ஆகும். ஏற்கனவே இந்த கார் 2025ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வரை விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், தற்போது நடைபெறும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Mercedes-Benz நிறுவனம் கடந்த ஆண்டு G 580 எலக்ட்ரிக் காரின் முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கிய நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் டெலிவரிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. EQ தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய Mercedes-Benz G580 EV இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (CBU) விற்கப்படுகிறது. இது quad-motor அமைப்பைக் கொண்டு, ஆல்-வீல்-டிரைவ் (AWD) திறனை வழங்குகிறது.

Mercedes Benz Electric G-Class G580

வடிவமைப்பு:

G 580, AMG Line ஸ்பெக்கில் சற்று ஸ்போர்ட்டியர் தோற்றத்துடனும், 20-இன்ச் அலாய் வீல்களுடன் வழங்கப்படுகிறது மற்றும் 555 லிட்டர் பூட் கொள்ளளவு கொண்டுள்ளது. இந்த காரின் கேபின் வடிவமைப்பு, 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.3-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அம்சங்கள்:

Ventilated மற்றும் Massaging front seats, 64 colours of ambient lighting, three-zone climate control, temperature-controlled cup holders, sunroof மற்றும் MBUX with in-built navigation போன்ற நீண்ட அம்சப் பட்டியல் கொண்டுள்ளது.

evoIndia

பாதுகாப்பு அம்சங்கள்:

பாதுகாப்பு அம்சங்களில் ஆக்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் வார்னிங், 360 டிகிரி கேமராக்கள், ஆக்டிவ் ஸ்பீட் லிமிட் அசிஸ்ட், டிரான்ஸ்பரன்ட் பானட் செயல்பாடு மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு ஆகியவை அடங்கும்.

முன்னர் குறிப்பிட்டபடி, G 580-யின் quad-motor AWD எலக்ட்ரிக் Drivetrain 579 bhp மற்றும் 1,164 Nm டார்க்கை உருவாக்குகிறது.

பேட்டரி பவர்:

இந்த மோட்டார்கள் 116 kWh பேட்டரி பேக்கிலிருந்து சக்தியைப் பெறுகின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால் 473 கிமீ ரேஞ்சுடன் 4.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 200 kW வரை ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 32 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.