zomato model image
zomato model image file image
இந்தியா

சைவ உணவிற்குப் பதிலாக அசைவ உணவு.. டெலிவரி செய்த Zomato, McDonald-க்கு ரூ.1 லட்சம் அபராதம்!

Prakash J

ஜோத்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் தீர்வு மன்றம், சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவை தவறாக டெலிவரி செய்ததாகக் கூறி, இரு முன்னணி உணவு தொடர்பான நிறுவனங்களுக்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜோத்பூர் மாவட்ட நுகர்வோர் தீர்வு மன்றம், ‘நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019ஐ மீறியதற்காக, உணவு டெலிவரி செய்யப்பட்ட பங்குதாரர்களான Zomato மற்றும் McDonald's மீது ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

zomato

மேலும் வழக்குச் செலவாக ரூ.5,000 விதிக்கப்பட்டுள்ளது. பண அபராதம் மற்றும் வழக்குச் செலவு ஆகிய இரண்டும் கூட்டாகவும், தனியாகவும் Zomato மற்றும் McDonald'ஸால் ஏற்கப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது. Zomato வாடிக்கையாளருடனான உறவை நிர்வகிக்கும் சேவை விதிமுறைகள், Zomato உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கான உதவியாளர் மட்டுமே என்றும், சேவையில் ஏதேனும் குறைபாடு, ஆர்டரில் குறைபாடு மற்றும் தரம் ஆகியவற்றின் தவறான டெலிவரிக்கும் உணவகப் பங்குதாரரே பொறுப்பு என்று அது தெளிவுபடுத்தி உள்ளது.

இதையும் படிக்க; ’விவாகரத்து பெற்றவராக சாக விரும்பவில்லை’ - 82 வயது மனைவிக்கு எதிரான 89 வயது முதியவரின் மனு தள்ளுபடி!

அதேநேரத்தில், மாவட்ட நுகர்வோர் தீர்வு மன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு எதிராக Zomato உணவக நிறுவனம் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

zomato

கடந்த 2019ஆம் ஆண்டு, புனே நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சைவ உணவை ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு இரண்டு முறை அசைவ உணவை டெலிவரி செய்ததற்காக இதே புனே Zomato நிறுவனத்துக்கு ரூ.55,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 123 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் மீண்டும் கிரிக்கெட்.. மேலும் 4 விளையாட்டுகள் புதிதாக சேர்ப்பு!