மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை (நாரி சக்தி வந்தன் அதினியம்) 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, இந்த மசோதா தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
இந்த சூழலில்தான், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச அரசின் ஆட்சி நடந்து வரும் நிலையில், அக்கட்சியின் வருடாந்திர மாநாடு, தெலுங்கு தேசம் கட்சியின் செயல் தலைவரும் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கல்வி அமைச்சருமான நர லோகேஷ் தலைமையில் இன்று தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தான், இந்த மாநாட்டில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை நர லோகேஷ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைப்படுத்த தாமதம் ஏற்பட்டு வரும் சூழலில், 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.