காட்டு யானை Pt web
இந்தியா

அசாம் | கால்பந்து விளையாடிய காட்டு யானை! வைரல் வீடியோ

நுமாலிகார் பகுதி தேயிலை தோட்டங்களும் கிராமங்களும் யானைகளின் வழித்தடமாக உள்ளதால், இங்கு மனித-யானை மோதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

PT WEB

அசாம் மாநிலம் நுமாலிகார் பகுதியில் உள்ள பாகிதாலா தேயிலை தோட்டத்தில், சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த மைதானத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று, அவர்கள் விட்டுச்சென்ற கால்பந்தைக் காலால் எட்டி உதைத்து விளையாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவர்கள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த யானை மைதானத்திற்குள் வந்துள்ளது. இதைக் கண்டு அச்சமடைந்த சிறுவர்கள், பந்தினை அங்கேயே விட்டுவிட்டு பாதுகாப்பான தூரத்திற்கு ஓட்டம் பிடித்தனர். ஆனால், யானை எந்தவிதத் தாக்குதலுக்கும் முற்படாமல், காலியாக இருந்த மைதானத்தில் நீண்ட நேரம் பந்தைக் காலால் தட்டிக் கொடுத்து விளையாடியது. இந்த சுவாரஸ்யமான காட்சியை சிறுவர்கள் பாதுகாப்பான தூரத்தில் நின்று பார்த்து ரசித்தனர்.

நுமாலிகார் பகுதி தேயிலை தோட்டங்களும் கிராமங்களும் யானைகளின் வழித்தடமாக உள்ளதால், இங்கு மனித-யானை மோதல்கள் அடிக்கடி நிகழ்கின்றன. யானைகளின் இத்தகைய சேட்டைகள் பார்ப்பதற்கு விளையாட்டுத்தனமாகத் தெரிந்தாலும், பொதுமக்கள் யாரும் அவற்றுக்கு அருகில் செல்லவோ அல்லது கூட்டமாகக் கூடி தொந்தரவு செய்யவோ கூடாது என வனத்துறை ஊழியர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.