45 நிமிடங்களுக்கு மேல் உட்காருகிறீர்களா? இதயத்துக்கு ஆபத்து.. அதிர்ச்சி எச்சரிக்கை!
தொடர்ந்து 45 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இதய ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்குமென இதயநோய் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் அசையாமல் உட்கார்ந்திருக்கும்போது கால்களில் ரத்த ஓட்டம் மந்தமாகி, நாளடைவில் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து மற்றும் நீரிழிவு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கின்றனர். காலையில் ஜிம் அல்லது நடைபயிற்சி சென்றாலும், நாளின் மற்ற நேரங்களில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கும் பழக்கம் இந்தத் தீமைகளை முழுமையாகத் போக்குவதில்லை.
எனவே, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நீண்ட நேரம் வேலை செய்வோர் ஒவ்வொரு 45 முதல் 60 நிமிடங்களுக்கு ஒருமுறை எழுந்து சில நிமிடங்கள் நடந்து செல்வது, தண்ணீர் அருந்துவது அல்லது சிறிய உடல் அசைவுகளைச் செய்வது இதயத்தையும் உடல் நலத்தையும் பாதுகாக்க மிகவும் அவசியம் என எச்சரிக்கின்றனர்.

