ராமர் கோயில் திறப்பு விழா - எங்கெங்கு விடுமுறை
ராமர் கோயில் திறப்பு விழா - எங்கெங்கு விடுமுறை  puthiya thalaimurai
இந்தியா

ராமர் கோயில் திறப்பு விழா - எங்கெங்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது?

PT WEB

ராமர் கோயில் திறப்பு விழாவை காண வசதியாகவும் வழிபாடுகள் நடத்துவதற்கு ஏதுவாகவும் பல்வேறு மாநில அரசுகள் விடுமுறை அறிவித்து வருகின்றன.

அதன்படி,

ஒருநாள் விடுமுறை: உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா, கோவா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரை நாள் விடுமுறை: குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, திரிபுரா, அசாம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் டெல்லி, ஒடிசா தவிர மற்ற மாநிலங்கள் பாஜக / பாஜக கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களாகும். இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி புரியும் இமாச்சல பிரதேச மாநில அரசும் விடுமுறை அளிவித்துள்ளது.

மற்றபடி உத்தராகண்ட், அசாம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் மதுக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகளுக்கு காலை முதல் மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திங்களன்று பங்குச்சந்தைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.