மம்தா, சுவேந்து Chat Gpt
இந்தியா

மேற்கு வங்கம் | TMC கோட்டை சிதறியது எப்படி.. எளிதாய் வெற்றிபெற்ற பாஜக!

பாஜக சட்டமன்றக் குழு தனது தலைவரை தேர்வுசெய்யும் முன்னதாக டெல்லியிலிருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலிடப் பார்வையாளராக வர உள்ளார்.

Prakash J

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தான் போட்டியிட்டபவானிபூர், நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் பவானிபூரில், முதல்வர் மமதா பானர்ஜியை சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தலில் 293 தொகுதிகளுக்கான முடிவுகளின்படி, பாஜக 207 இடங்களில் வெற்றிபெற்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, மேற்கு வங்கத்தில் வரும் 9ஆம் தேதி புதிய முதல்வர் பதவியேற்பார் என அம்மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். பாஜகவின், புதிய முதல்வராக எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தேர்வாக வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாஜக சட்டமன்றக் குழு தனது தலைவரை தேர்வுசெய்யும் முன்னதாக டெல்லியிலிருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலிடப் பார்வையாளராக வர உள்ளார். இதன்பின் சட்டமன்றக் குழுவின் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தான் போட்டியிட்டபவானிபூர், நந்திகிராம் ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாகக் கருதப்படும் பவானிபூரில், முதல்வர் மமதா பானர்ஜியை சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சுவேந்து அதிகாரி தோற்கடித்துள்ளார். தனது சொந்தத் தொகுதியான நந்திகிராமில், திரிணாமுல் காங்கிரஸின் பவித்ரா கார் என்பவரை சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளார். பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி இத்தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 6 ஆண்டுகளுக்கு முன் திரிணாமுல் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரத்தில், மேற்கு வங்க தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு சிறுபான்மையினரின் எதிர்ப்புகள் சிதறியதும் முக்கியக் காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. முர்ஷிதாபாத், மால்டா, உத்தர தினாஜ்பூர் மாவட்டங்களில் இஸ்லாமிய வாக்குகள் அதிகம் உள்ள நிலையில், அவை திரிணாமுல் கட்சிக்கே கிடைத்துவந்தன.

சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜி

ஆனால், தற்போதைய தேர்தலில் அவ்வாக்குகள் ஹுமாயூன் கபீர் தொடங்கிய புதிய கட்சி, காங்கிரஸ், இடதுசாரிகளுக்கும் கணிசமாகச் சென்றுள்ளன. இம்மூன்று மாவட்டங்களில் கடந்த முறை 8 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை 19 இடங்களில் வென்றுள்ளது. கடந்த முறை 35 இடங்களில் வென்ற திரிணாமுல் இம்முறை 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. பாஜக தனது சொந்த வாக்கு வங்கியைப் பெரிய அளவில் விரிவுபடுத்தாவிட்டாலும், எதிர்க்கட்சிகளின் வாக்குச் சிதறலால் பல தொகுதிகளில் எளிதாக வெற்றிபெற்றுள்ளது.