சண்டிகர் முகநூல்
இந்தியா

நீடிக்கும் போர் பதற்றம்; சண்டிகரில் எச்சரிக்கை ஒலி!

சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இராணுவம் சண்டிகர் பகுதியை தாக்க வாய்ப்பு உண்டு என்று தகவல் வெளியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன்கள் வானிலேயே அழிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலையும் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாநிலங்களில் நேற்று இரவு மின் தடை, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை , எல்லையோர மாநிலங்களில் உச்ச கட்ட அலர்ட் போன்றவை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் பால்கனியில் நிற்க கூடாது எனவும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.