மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா முகநூல்
இந்தியா

தாக்கிய கொள்ளையர்கள்..உடலில் பாய்ந்த புல்லட்; 30கி.மீ வேனை ஓட்டி பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்!

ஜெனிட்டா ரோஸ்லின்

மகாராஷ்டிராவில், கொள்ளையர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டும் அதனை பொருட்படுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு வண்டியை ஓட்டி வந்த பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு மக்களிடையே பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கோம்தேவ் கவாடே. டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக பணிக்கு சென்ற இவர், நேற்று முன் தினம் கிட்டத்தட்ட 35 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நாக்பூரை நோக்கி மகாரஷ்டிராவின் அமரவதி - நாக்பூர் நெடுஞ்சாலையில் டெம்போ டிராவலர் வேனை ஓட்டிச் சென்றுள்ளார்.

கவாடே டிரைவரான - வேன் டிரைவர்

தேசிய நெடுஞ்சாலை 6 ல் பயணித்து கொண்டிருந்தபோது, தீடீரென கார் ஒன்று அவர்களை வேகமாக பின் தொடர்ந்துள்ளது. பின் தொடர்ந்த வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கியதுடன் உடனடியாக வேனை நிறுத்துமாறு வழி மறைத்துள்ளனர்.

இவர்கள், எதோ கொள்ளையர்கள்தான் என்பதை உணர்ந்து கொண்ட டிரைவர் வேனை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். இதனால், கோபமடைந்த கொள்ளையர்கள் ஓட்டுநரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால், காயமடைந்த டிரைவர், காயத்தினை பொருட்படுத்தாமல் பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இதனால், வண்டியை நிறுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டியுள்ளார் கவாடே. பின்னர், அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை பாதுகாப்பாக இறங்கிய கவாடே கொள்ளையர்கள் குறித்து போலீஸிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் போலீஸில் தெரிவிக்கையில், “அமராவதியிலிருந்து வாகனத்தில் பயணிகளுடன் வந்தபோதுதான் இந்த சம்பவம் நிகழ்ந்தது. எங்களை துரத்திய அந்த வாகனம் உத்திரப்பிரேதசத்தினை சேர்ந்தது. ஆனால் அதன் பதிவெண் எனக்கு நினைவில் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டிரைவருடன் சேர்த்து மொத்தம் 4 பேர் காயமடைந்த நிலையில் டிவ்சா பகுதியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தன் உயிரினையும் பொருட்படுத்தாமல், பயணிகளின் உயிரை காப்பாற்றிய டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.