அமித் சவுத்ரி
அமித் சவுத்ரி ட்விட்டர்
இந்தியா

உ.பி.:12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை; தான் குற்றவாளி இல்லை என்பதை சட்டம் படித்து நிரூபித்த இளைஞர்

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அமித் சவுத்ரி. இவர், கடந்த 2011-ஆம் ஆண்டு பாக்பத்தில் உள்ள தனது சகோதரியின் மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவருக்கு வயது 18. இந்தச் சூழலில் அங்கு ஏற்பட்ட பிரச்னை ஒன்றில் இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒரு காவலர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் அமித் சவுத்ரி உடன் சேர்த்து மொத்தம் 17 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் அமித் சவுத்ரி பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்தபோதுதான் வழக்கில் சிக்கியுள்ளார். இதனால் அவரது படிப்பு தடையானது.

பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து, ஜாமீனில் வெளிவந்து மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்துள்ளார். இதன்பிறகு, இந்த வழக்கில் தன்னை குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்காக எல்.எல்.எம் முதுநிலை சட்டம் பயின்றார்.

பின்னர், தன்மீது போடப்பட்ட வழக்கில் உள்ள தடயங்களையம், சாட்சிகளையும் சேகரித்ததில் அமித் சவுத்ரி குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீதுள்ள வழக்குகளையும் நீக்கி உத்தரவிட்டது. இதுகுறித்து அமித் சவுத்ரி, "என்னோடு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட 11 பேருக்கும், நான் உதவ உள்ளேன். அவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்க உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மாரடைப்பு: ஓடிப்போய் உதவிய இளைஞர்கள்.. ஜாமீன் மறுத்த நீதிபதி.. கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர்!