model image
model image freepik
இந்தியா

சிறுநீரக தானம் செய்த மனைவி.. ’தலாக்’ சொல்லி அதிர்ச்சி கொடுத்த கணவர்.. உ.பி-யில் அரங்கேறிய சம்பவம்!

Prakash J

உத்தரப்பிரதேசத்தில் தன் சகோதரனுக்கு சிறுநீரகம் ஒன்றைத் தானம் செய்த இளம்பெண்ணுக்கு, அவரது கணவர் தலாக் கூறியிருப்பது அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

model image

இஸ்லாம் சமூகத்தில், ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை பல நூற்றாண்டுகளாக இருந்தது. இதனால் அச்சமூகப் பெண்கள் பாதிக்கப்படுவதைத் தடைசெய்யும் வகையில் முத்தலாக் என்னும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டம் ஆகஸ்ட் 1, 2019 முதல் அமலுக்கு வந்தது.

இதன்மூலம் ’தலாக்’ முறையில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு நீதி கிடைத்தது. மேலும், அவர்களுக்கான உரிமையும் கிடைக்கப் பெற்றது. எனினும், இன்னும் சில இஸ்லாம் மக்களிடையே இதுபோன்ற ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையில் இருக்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்றிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க: பொன்முடி வழக்கு தீர்ப்பு: இதுவரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்?-முழு விபரம்

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உத்தரப்பிரதேசம் பைரியாஹி பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தன்னுடைய சகோதரனின் உயிரைக் காப்பாற்றும் வகையில், குல்சைபா தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தானம் செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து கேள்விப்பட்ட அவரது கணவர், வீடியோகாலில் குல்சைபாவிடம் அதுசம்பந்தமாக விசாரித்துள்ளார். அவரும், நடந்ததைக் கூறியுள்ளார். இதையடுத்து வாட்ஸ்அப்பிலேயே அவருக்கு மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகுக்கிறது. முன்னதாக, கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில், இதே உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் தனது புருவங்களை, அலங்காரம் செய்ததற்காக அவரது கணவர் மூலம் தலாக் கூறியுள்ள விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.